பல உயிர்களைக் காப்பாற்றிய 3 பேருக்கு அண்ணா வீர விருது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

2003ம் ஆண்டுக்கான தமிழக அரசின் அண்ணா வீர விருது 3 பேருக்கு வழங்கப்படவுள்ளது. இதில் 2 பேர் மற்றவர்களின்உயிரைக் காக்கும்போது உயிர் நீத்துவிட்டதால் அவர்களது குடும்பத்தினரிடம் இந்த விருதுகள் வழங்கப்படும்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள குடியரசு தின விழாவின்போது இந்த விருது வழங்கப்படும். சென்னையைச்சேர்ந்த ஸ்ரீதர், நெல்லையைச் சேர்ந்த மகாராஜன், கோவையைச் சேர்ந்த முகம்மது பிலால் ஆகியோரே வீர விருது பெறத் தேர்வுசெய்யப்பட்டுள்ளவர்கள்.

இவர்களில் பிலால் மற்றும் மகாராஜன் ஆகிய இருவரும் உயிர் நீத்து விட்டதால், அவர்களது குடும்பத்தினர் விருதைப்பெற்றுக்கொள்வார்கள்.

கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தையை மீட்டதற்காக ஸ்ரீதருக்கு வீர விருது வழங்கப்படுகிறது. அதேபோல, மீன் பிடிபடகு கவிழ்ந்ததில் கடலில் மூழ்கிய 4 பேரை உயிருடன் காப்பாற்றினார் மகாராஜன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் நீரில்மூழ்கி உயிழந்தார்.

கோவையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது 5 பேரைக் காப்பாற்றினார் பிலால். ஆனால் அவர் வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டு பதாபமாக உயிழந்தார்.

ரூ. 2000 மதிப்புள்ள பதக்கம், ரூ. 10,000 ரொக்கப் பரிசு ஆகியவற்றை உள்ளடக்கியது இந்த விருது. முதல்வர் ஜெயலலிதாஇவற்றை நாளை வழங்கவுள்ளார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+