உச்ச கட்டத்தில் காங். கோஷ்டிப் பூசல்: சென்னை வந்தார் சோனியாவின் தூதர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி மோதல் வெடித்துள்ளதால் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தனதுதூதரை சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தூதராக வந்துள்ள அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயாலளர் நரேஷ் ராவல் இன்று இன்று அனைத்துகோஷ்டிகளுடனும் ஆலோசனை நடத்தினார்.

சாத்தான்குளம் இடைத் தேர்தலில் திமுகவின் ஆதரவைக் கோருவது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களுக்குள்பெரும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.

மாநிலத் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் (சசிகலாவின் பின்னணி உள்ளவர்) திமுக ஆதரவு தேவையில்லை என்றகருத்தில் உள்ளார். இவரை ஜெ. ஆதரவாளரான தங்கபாலு ஆதரிக்கிறார். ஆனால், செயல் தலைவர்இளங்கோவன், திமுகவின் ஆதரவைக் கோரியே ஆக வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்கிறார்.

சோ.பாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸுக்கு ஆதரவு கிடையாது என்று திக தலைவர் கருணாநிதிஅறிவித்துள்ளார். இதனால் சோ.பாவை இளங்கோவன் திட்டித் தீர்த்து வருகிறார்.

இந் நிலையில் திமுகவின் ஆதரவைப் பெற கருணாநிதியை நேரில் சந்திக்கத் தயாராக இருப்பதாக இளங்கோவன்கூறியுள்ளது கட்சிக்குள் பெரும் கருத்து வேறுபாடுகளை உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து விவாதித்து முடிவெடுக்க சென்னையில் காங்கிரஸ் கட்சியின் அரசியல் விவகாரக் குழுக் கூட்டம்இன்று கூடியது. இக் கூட்டத்தில் அடிதடியே நடக்கலாம் என காங்கிரஸ் மத்தியத் தலைமை சந்தேகப்பட்டதால்நரேஷ் ராவலை தூதராக அனுப்பி வைத்தது.

அவர் தலைமையில் தான் இன்று கூட்டமே நடந்தது. இக் கூட்டத்தில் சோ.பாலகிருஷ்ணன், இளங்கோவன்,எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், தங்கபாலு, குமரி அனந்தன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள்கலந்துகொண்டனர்.

சோனியாவின் ஆள் கூட்டத்தில் இருந்ததால் அனைத்துத் தலைவர்களும் அடக்கி வாசித்தனர்.

கூட்டத்தில் திமுகவின் ஆதரவைப் பெறுவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

அப்போது ஒரு தரப்பினர் திமுகவின் ஆதரவு தேவையில்லை என்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் தனித்துநின்றே ஜெயிக்கலாம் என்றும் பேசினர்.

ஆனால், இளங்கோவன் ஆதரவாளர்கள் திமுகவின் ஆதரவு இருந்தால் மட்டுமே வெற்றி நிச்சயம் என்று பேசினர்.ஆனால் இளங்கோவனுக்கு தங்கபாலுவின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கட்சியின் அனைத்து மட்டத் தலைவர்களுடன் ஆலோசிக்காமல், தன்னிச்சையாக இளங்கோவன் செயல்படுவதாகக்குற்றம் சாட்டினர்.

இளங்கோவனின் ஆதரவாளரான மயிலாப்பூர் பகுதி காங்கிரஸ் நிர்வாகியை சஸ்பெண்ட் செய்த ஒழுங்குநடவடிக்கைக் குழுத் தலைவர் குமரி அனந்தனைக் கண்டித்தும் குரல்கள் எழுந்தன.

மொத்தத்தில், திக ஆதரவு தேவையா, இல்லையா என்ற விவாதம் மறைந்து பரஸ்பரம் புகார் கூறிக் கொள்ளும்கூட்டமாக இது மாறியது.

அகில இந்தியப் பார்வையாளர் முன்னிலையில் கூட்டம் நடந்ததால் ரசாபாசக் காட்சிகள் எதுவும்அரங்கேறவில்லை. வேட்டிகளும் கிழியவில்லை.

கூட்டத்திற்குப் பின் வெளியே வந்த நரேஷ் ராவல் பேசுகையில், மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் தாமாக முன்வந்து காங்கிரஸை ஆதரிக்க வேண்டும். சாத்தான்குளம் காங்கிரஸ் கட்சியின் கோட்டை. அங்கு அதிக ஒருமுறைகூட வெற்றி பெற்றதில்லை.

எனவே இந்த முறையும் காங்கிரஸ் வேட்பாளர்தான் வெற்றி பெறுவார் என்றார். திமுக ஆதரவைக் கோருவதுதொடர்பாக எந்தக் கருத்தையும் அவர் வெளியிடவில்லை.

திமுக ஆதரவு கேட்கும் விஷயத்தில் சோனியா தான் இறுதி முடிவு எடுப்பார் என்று தெரிகிறது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+