வேன் கவிழ்ந்த விபத்து: நெடுமாறனும் காயம்
சென்னை:
நேற்று கடலூர் அருகே நடந்த வேன் விபத்தில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறனுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாகத்தெரியவந்துள்ளது. நேற்று காலை அவர் காயம் ஏதும் இன்றி தப்பிவிட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
ஆனால், அவர் லேசான காயமடைந்திருப்பதாக நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்துள்ளனர்,
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்தாக பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் உள்ள நெடுமாறன் மீதுசமீபத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நகல் நேற்று அவருக்கு வழங்கப்பட இருந்தது. இதற்காக அவர்சென்னை பூந்தமல்லி பொடா நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட இருந்தார்.
ஆனால் இன்னொரு வழக்குத் தொடர்பாக திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுவிட்டு மீண்டும் கடலூர் சிறைக்குக்கொண்டு வரப்பட்டபோது, அவர் வந்த போலீஸ் வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது விழுந்தது. இதில் 3 போலீஸாருக்கு காயம்ஏற்பட்டதாகவும் நெடுமாறன் காயமேதும் இன்றி தப்பிவிட்டதாகவும கூறப்பட்டது.
ஆனால், நேற்று மாலை பொடா நீதிமன்றத்தில் அவரது வழக்கு விசாரணைக்கு வந்தபோது போலீஸ் தரப்பில் ஆஜரான அரசுவக்கீல், பல்வேறு வழக்குகள் தொடர்பாக திண்டுக்கல், கொடைக்கானல், திருச்செந்தூர் ஆகிய நீதிமன்றங்களில் நெடுமாறனைஆஜர்படுத்த வேண்டியுள்ளது.
மேலும் சாலை விபத்தில் நெடுமாறன் லேசான காயமடைந்துள்ளார். எனவே வேறு ஒரு தேதியில் குற்றப்பத்திரிக்கையின் நகலைஅவரிடம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்ற நீதிபதி ராஜேந்திரன், பிப்ரவ 3ம் தேதி நெடுமாறன், தாயப்பன் மற்றும் சுப. வீரபாண்டியன் ஆகியோருக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்படும் என்று உத்தரவிட்டார்.
திருச்செந்தூர் வழக்கில் தீர்ப்பு:
இந் நிலையில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாக நெடுமாறன் மீது திருச்செந்தூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளவழக்கில் வரும் 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
இந்த வழக்கில் கடந்த 9ம் தேதி நெடுமாறனுக்கு ஆதரவாக 9 பேர் சாட்சியம் அளித்தனர். வியாழக்கிழமை நெடுமாறன்ஆஜரானார். அத்துடன் வழக்கு விசாரணை முடிவடைந்தது. இந்த வழக்கில் வரும் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என்றுநீதிபதி பால் துரை அறிவித்தார்.
தமிழில் குற்றப் பத்திரிக்கை:
இந் நிலையில் பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் இன்னொரு தமிழர் தேசிய இயக்க நிர்வாகியான பாவாணனுக்குகுற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. தனக்கு தமிழில் மட்டுமே படிக்க விருப்பம் என்றும் எனவே தமிழில் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்க வேண்டும் என்றும் நீதிபதியிடம் பாவாணன் கோக்கை விடுத்தார்.
இதை ஏற்ற நீதிபதி, நீதிமன்றத்திலும் தமிழிலேயே நிடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசையும். ஆனால்,ஆங்கிலம்தான் ஆட்சி மொழியாக உள்ளது. இருப்பினும் தங்களின் வேண்டுகோள் ஏற்கப்படும் என்று தெவித்தார்.
மேலும், கோவை சிறையில் தனக்கு கொடுமைகள் இழைக்கப்படுவதாகவும், எனவே தன்னை திருச்சி சிறையில் அடைக்கஉத்தரவிடுமாறும் பாவாணன் கோககை விடுத்தார். இதற்கு அரசு வக்கீல் கடும் எதிர்ப்பு தெவித்தார். இருப்பினும், பாவாணன்கோரிக்கையை நீதிபதி ஏற்றார்.
-->












Click it and Unblock the Notifications