போலி பாஸ்போர்ட் மோசடி: சி.பி.ஐயிடம் சிக்கிய திருச்சி அதிகாரிகள்

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

லஞ்சம் வாங்கிக் கொண்டு போலி பாஸ்போர்ட்களை வினியோகித்து வந்த 3 திருச்சி பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகளைசி.பி.ஐ. கைது செய்துள்ளது. இவர்களுக்கு உதவிய புரோக்கர் மற்றும் டிராவல் ஏஜென்சி அதிபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் பல்வேறு பெயர்களில் ஒரே ஆசாமியே பல பாஸ்போர்ட்களை வைத்திருப்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாகஹவாலா வழியில் அன்னிய செலாவணி மோசடி செய்பவர்கள், கடத்தல் கும்பல்களைச் சேர்ந்தவர்கள், தீவிரவாதிகள் என தேசவிரோத கும்பல்களிடம் போலி பாஸ்போர்ட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

இதையடுத்து நாடு முழுவதுமே போலி பாஸ்போர்ட்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளில் மத்திய உளவுப் பிரிவான ஐ.பி.மாநில போலீஸ், மற்றும் சி.பி.ஐ. ஆகியவை ஈடுபட்டுள்ளன.

போலி பாஸ்போர்ட் வழங்குவதில் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகளுக்கும் பெரும் பங்கு இருப்பது தெரியவந்துள்ளது.இதையடுத்து நாடு முழுவதுமே பாஸ்போர்ட் அலுவலகங்களில் சி.பி.ஐ. சோதனையில் ஈடுபட்டுள்ளது.

இதில் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகம் வசமாக சிக்கியுள்ளது. இங்கு கடந்த சில மாதங்களில் மட்டும் 112 பாஸ்போர்ட்தொலைந்து போனதாக திருச்சி பாஸ்போர்ட் அலுவலக கோப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இந்த பாஸ்போர்ட்களை அலுவலக ஊழியர்களே பெயரை மாற்றி பலருக்கும் விற்றுள்ள விவரம் இப்போதுவெளியாகியுள்ளது.

இதற்காக லட்சக்கணக்கில் பணம் கைமாறியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த ஒரு புரோக்கர்,திருச்சியைச் சேர்ந்த ஒரு டிராவல் ஏஜென்சி ஆகியோரின் உதவியுடன் இந்த பாஸ்போர்ட்கள் விற்கப்பட்டுள்ளன.

போலியான பெயர்களில், இல்லாத முகவரிகளுடன் இந்த பாஸ்போர்ட்களை உருமாற்றி புரோக்கர்களிடமும் டிராவல்ஏஜென்சியிடமும் தந்துள்ளனர். இவற்றை அவர்கள் பிறரிடம் லட்சகணக்கில் பணம் வாங்கிக் கொண்டு விற்றுள்ளனர்.

பெரும் அளவில் போலி பாஸ்போர்ட்கள் திருச்சி அலுவலகத்தில் இருந்து தான் வெளியாகின்றன என்பதை மத்திய உளவுப் பிரிவுகண்டுபிடித்தது. இதையடுத்து சி.பி.ஐக்கு உளவுப் பிரிவு தகவல் தந்தது.

இதைத் தொடர்ந்து மாநில போலீஸ் உதவியுடன் சி.பி.ஐ. ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டது. அப்போது இந்த மோசடியில்பாஸ்போர்ட் அலுவலகத்தைச் சேர்ந்த 3 அதிகாரிகளே ஈடுபட்டிருப்பது உறுதியானது.

இதையடுத்து நேற்று மதுரையில் இருந்து ஒரு சி.பி.ஐ. குழு திருச்சி விரைந்தது. அதிரடியாக பாஸ்போர்ட் அலுவலகத்துல்நுழைந்த சி.பி.ஐ. அதிகாரிகள் கண்காணிக்கப்பட்டு வந்த 3 அதிகாரிகளையும் கைது செய்தனர்.

இவர்களை அலுவலகத்திலேயே பூட்டி வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது செய்த தவறுகளை இந்தஅதிகாரிகள் ஒப்புக் கொண்டனர். இவர்கள் கொடுத்த தகவலை வைத்து திருச்சி டிராவல்ஸ் எஜென்சி அதிபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டார்.

இன்னொரு சி.பி.ஐ. குழு திருநெல்வேலி மாவட்டத்துக்கு விரைந்து சென்று புரோக்கரையும் கைது செய்தது. இதைத் தொடர்ந்துஇந்த 5 பேரையும் மதுரைக்குக் கொண்டு சென்ற அதிகாரிகள் அவர்களை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இவர்களை சி.பி.ஐயின் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த ஐந்த பேரும் பேரும் தகவல்களை வைத்து 52 போலி பாஸ்போர்ட்களை அதை வாங்கியவர்களிடம் இருந்து சி.பி.ஐ.மீட்டுள்ளது. மற்ற பாஸ்போர்ட்களையும் மீட்கும் பணி நடந்து வருகிறது.

இதற்காக மாநில அளவில் வேட்டையில் இறங்கியுள்ளது சி.பி.ஐ.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+