மன்னிப்பு கேட்டார் ராமதாஸ்: நீதிமன்றத்திடம் இருந்து தப்பினார்
சென்னை:
அறக்கட்டளை நிர்வாகம் தொடர்பாக நீதிபதியைத் தாக்க முயன்ற வழக்கில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,தலைவர் ஜி.கே.மணி மற்றும் மேலும் 2 பேர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டனர். இதையடுத்து அவர்கள் மீதான அவமதிப்புவழக்கை உயர் நீதிமன்றம் கைவிட்டது.
செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளைக்குச் சொந்தமான கோடிக்கணக்கான சொத்துக்களை நிர்வகிக்க ஓய்வு பெற்றஉயர்நீதிமன்ற நீதிபதி தங்கமணியைத் தலைவராகக் கொண்ட குழுவை சென்னை உயர்நீதிமன்றம் அமைத்தது.
ஆனால் தங்கமணி உள்ளிட்ட உறுப்பினர்கள் பதவியேற்க வந்தபோது, பாமகவினர் பெரும் ரகளையில் ஈடுபட்டனர்.வன்னியர்கள் மட்டுமே இந்த அறக்கட்டளையின் நிர்வாகிகளாக இருக்க வேண்டும் என நீதிபதியிடமே ஜாதிப் பிரச்சனையக்கிளப்பினர். நீதிபதியை தாக்கவும் முயன்றனர்.
இதையடுத்து ரகளையில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் ராமதாசும்சேர்க்கப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜரான ராமதாசுக்கு நீதிபதிகள் டோஸ் விட்டனர்.
இந் நிலையில் நீதிபதிகள் ஜெகதீசன், தினகரன் ஆகியோர் முன் ஆஜரான ராமதாஸ், ஜி.கே.மணி ஆகியோர் நிபந்தனையற்றமன்னிப்பு கேட்டனர். நீதிமன்ற உத்தரவுகளை அவமதிக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்றும் அவர்கள் விளக்கினர்.
மேலும், செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இனிமேல் ஒழுங்காகநடந்து கொள்வதாகவும் உறுதியளித்தனர்.
இதைத் தொடர்ந்து ராமதாஸ், ஜி.கே.மணி மற்றும் இருவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கைவிடுவதாக நீதிபதிகள்அறிவித்தனர்.
மேலும், வன்னியர்களை மட்டுமே செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை நிர்வாகக் குழுவில் சேர்க்க வேண்டும் என்று ராமதாஸ்கூறிய யோசனைக்கு அதிக முக்கியத்துவம் தரத் தேவையில்லை என்றும் நீதிபதிகள் தெவித்தனர்.
-->












Click it and Unblock the Notifications