டெல்லி, மும்பையில் விமானங்கள் பறக்கத் தடை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

நாளை குடியரசு தினம் கொண்டாடப்படுவதையொட்டி நாடு முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.

டெல்லியில் குடியரசு தின ராணுவ அணிவகுப்பு நடக்கவுள்ள பாதை முழுவதும் நேற்றே மூடப்பட்டுவிட்டது. மேலும் அணிவகுப்பு நடக்கும்போது டெல்லியிலும் மும்பையில் இருந்து விமானங்கள் கிளம்பவும் இந்த நகர்களுக்குள் விமானங்கள் வரவும்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அணி வகுப்பை ஜனாதிபதி கலாம், பிரதமர் வாஜ்பாய், சிறப்பு விருந்தினராக வந்துள்ள ஈரான் அதிபர் முகம்மத் கதாமிஆகியோர் பார்வையிட உள்ளதால் 12 இடங்களில் விமான எதிர்ப்பு பீரங்கிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

நியூயார்க்கில் நடந்தது மாதிரி இந்தியாவிலும் விமானங்களைக் கொண்டு தாக்குதல் நடக்கலாம் என்பதால் விமான எதிர்ப்புபீரங்கிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. டெல்லியில் மட்டும் பாதுகாப்புப் பணியில் 50,000 மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விமானப் படையின் ஹெலிகாப்டர்களைக் கொண்டு வானில் கண்காணிப்பும் நடத்தப்பட்டு வருகிறது. ரசாயண, உயிரியல்ஆயுதங்களால் தாக்குதல் நடந்தாலும் அதைச் சமாளிக்கும் வகையில் ராணுவம் தயார் நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதே போல காஷ்மீரிலும், மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நகர்களிலும் தாக்குதல்கள் நடக்கலாம் என்றுஎச்சரிக்கப்பட்டுள்ளதால் மிக பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+