அமைச்சரவை மாற்றம்: கருணாநிதியுடன் வாஜ்பாய் பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பிரதமர் வாஜ்பாய், திமுக தலைவர் கருணாநிதியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

நேற்று இரவு கருணாநிதியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் வாஜ்பாய், அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் உடல் நலம் குறித்து விசாத்தார்.

பின்னர் இருவருமே மாநில, தேசிய அரசியல் நிலவரம் குறித்தும் விவாதித்தனர்.

அமெரிக்காவில் ஹூஸ்டன் மருத்துவமனையில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ள மாறன் விரைவில் பூரண நலம் பெறவாழ்த்துத் தெவித்த வாஜ்பாய், அவருக்குத் தரப்பட்டு வரும் சிகிச்சை கருணாநிதியிடம் கேட்டறிந்தார்.

அதேபோல, அகில இந்திய பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடுவும் கருணாநிதியுடன் தொலைபேசியில் பேசினார். மாறன்உடல் நிலை குறித்தும் அரசியல் நிலவரம் குறித்தும் இருவரும் பேசினர்.

விரைவில் மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படவுள்ளது. அப்போது சில அமைச்சர்கள் பதவியிழக்கவுள்ளனர். முரசொலிமாறனே தொடரலாமா அல்லது வேறு யாரயாவது திமுக சார்பில் அமைச்சராக்க விரும்புகிறீர்களா என வாஜ்பாயும் நாயுடுவும்கருணாநிதியிடம் கேட்டதாகத் தெரிகிறது.

ஆனால், கட்சியில் விவாதித்து பதில் சொல்வதாக கருணாநிதி கூறிவிட்டதாகத் தெரிகிறது.

ஏ.கே. மூர்த்திக்கு கல்தா?

மாற்றி அமைக்கப்பட உள்ள மத்திய அமைச்சரவையில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மீண்டும்சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது. அதே நேரத்தில் பா.ம.க. சார்பில் ரயில்வே துணை இணையமைச்சராக உள்ள ஏ.கே.மூர்த்தியின் தலை உருளலாம்.

மூர்த்தி மீது தென்னக ரயில்வேயில் உள்ள வட இந்திய ரயில்வே அதிகாரிகள் ஏகக் கடுப்பில் உள்ளனர். தமிழ் மட்டுமே பேசத்தெரிந்த மூர்த்தி அதிகாரிகளை வேலை வாங்குவதில் தனது திறமையை நிரூபித்துவிட்டார். இதுவரை இந்த அதிகாரிகளால்கிடப்பில் போடப்பட்ட பல தமிழக திட்டங்களையும் நிறைவேற்றச் செய்துவிட்டார்.

இதில் அதிகாரிகளுடன் நேரடியாகவே பலமுறை மோதலிலும் இறங்கினார் மூர்த்தி. இதனால் இவர் மீது பிரதமர் அலுவலகத்தில்புகார்கள் மண்டிக் கிடக்கின்றன. இதன் காரணமாக இவரை தூக்கி வேறு உப்புக்குச் சப்பாணி பதவியில் வாஜ்பாய் போடலாம்என்று தெரிகிறது.

தமிழக திட்டங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதாக மூர்த்தி மீது புகார் சொல்லப்பட்டுள்ளது.

பொன்.ராதாகிருஷ்ணன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு பா.ஜ.க. கட்சிப் பொறுப்புக்குச் செல்லலாம் என்று தெரிகிறது.அந் நிலையில் தமிழக பா.ஜ.க. கோவை எம்.பி. ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம்.

மத்தியப் பதவிகள்:

இந் நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சிக் கவுன்சில் தலைவராக அமைச்சர் ஏ.கே.மூர்த்தி மத்திய அரசால்நியமிக்கப்பட்டுள்ளார். குழுவின் துணைத் தலைவராக இன்னொரு மத்திய அமைச்சரான டி.ஆர்.பாலு இருப்பார். காஞ்சிபுரம்எம்.பி. கிருஷ்ணசாமி, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

இந்தப் பதவியை பா.ம.க. தலைவர் ராமதாஸ் மத்திய அரசிடம் வற்புறுத்தி வாங்கியுள்ளார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+