வீரப்பன் கும்பல்- அதிரடிப் படையினர் கடும் மோதல்: துப்பாக்கிச் சண்டை

Subscribe to Oneindia Tamil

கொளத்தூர்:

வீரப்பன் கும்பலை அவனது சொந்த ஊரான கோபி நத்தம் காட்டுப் பகுதியிலேயே கர்நாடக, தமிழக அதிரடிப் படையினர்நேற்றிரவு சுற்றி வளைத்தனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது.

மேட்டூர் அருகேயுள்ள கொளத்தூர் காட்டுப் பகுதியில் உள்ள கோபிநத்தம் தான் வீரப்பனின் சொந்த ஊராகும். அடர்ந்த காட்டில்அமைந்துள்ளது இந்த கிராமம்.

நேற்றிரவு வீரப்பன் கும்பல் இந்த கிராமத்தில் பதுங்கியிருப்பதாக போலீஸ் உளவாளிகள் மூலம் தகவல் கிடைத்தது. இதையடுத்துதமிழக, கர்நாடக அதிரடிப்படையைச் சேர்ந்த 1,500 பேர் கமாண்டர் ஜோதிபிரகாஷ் மிர்ஜி தலைமையில் நள்ளிரவில் அந்தகிராமத்தை முற்றுகையிட்டனர்.

தமிழக அதிரடிப்படையினரும் சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தனர்.

இரு அதிரடிப்படைகளையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான போலீசார் இரவோடு இரவாக வீடு வீடாக சென்று சோதனை நடத்தினர்.ஆனால், வீரப்பன் சிக்கவில்லை. இதையடுத்து சுற்றியுள்ள காட்டுப் பகுதிகளில் அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டையில்இறங்கினர்.

அப்போது வீரப்பன் கும்பல் அதிரடிப்படையினரை நோக்கிச் சுட்டது. இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே பயங்கரதுப்பாக்கிச் சண்டை நடந்தது.

இதைத் தொடர்ந்து அக் கும்பல் அடர்ந்த காட்டுப் பகுதிகளுக்குள் தப்பியோடிவிட்டது. அதிரடிப்படையினரும் தொடர்ந்துஉள்ளே புகுந்தனர். இரு தரப்பினருக்கும் இடையே இரவு முழுவதும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.

மேலும் இன்று பகலிலும் கூட மரங்கள் நிறைந்த மலை முகடுகளில் வீரப்பன் கும்பல் மறைந்து இருந்து கொண்டு சுடுவதாககர்நாடக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இரு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடந்துவருவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், தமிழக போலீஸ் தரப்பில் இதுவரை இச் சம்பவம் குறித்து ஆழ்ந்த அமைதி நிலவுகிறது.

முன்னதாக நேற்றிரவு கோபி நத்தம் கிராமத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பல வீடுகளில் இருந்து துப்பாக்கிகள்,வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த ஆயுதங்களை எடுக்க வந்தபோது தான் வீரப்பன் கும்பல் அதிரடிப்படையால் சுற்றிவளைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இப்போது அதிரடிப்படையுடன் மோதிய கும்பலில் வீரப்பன் இருந்தானா? அல்லது அவனது கூட்டாளிகள் தான்அதிரடிப்படையினருடன் மோதிக் கொண்டிருக்கிறார்களா என்றும் தெரியவில்லை. இத் தாக்குதலில் இரு தரப்பிலும் ஏதும் உயிர்ச்சேதம் ஏற்பட்டதா என்றும் தெரியவில்லை.

விவரங்களைத் தர கர்நாடக, தமிழக போலீஸ் தலைமையகங்கள் மறுத்து வருகின்றன.

நாகப்பாவின் மர்மச் சாவுக்குப் பின் அதிரடிப்படையினருக்கும் வீரப்பன் கும்பலுக்கும் இடையே நேரடி மோதல் நடப்பதுஇதுவே முதல்முறையாகும்.

உதவியவர்கள் குண்டர் சட்டத்தில் கைது:

இதற்கிடையே, வீரப்பனுக்கு ஆயுதங்கள் வாங்கிக் கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ள 2 தமிழர் தேசிய விடுதலைப் படைதொண்டர்கள், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 10 நாட்களுக்கு முன் பெரம்பலூர் பகுதியில் கார்த்திகேயன், விஸ்வநாதன் ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் தமிழர் தேசிய விடுதலைப் படை என்ற நக்சலைட் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

வீரப்பனுக்கு அதி நிவீன ஆயுதங்கள், வெடிபொருட்களை சப்ளை செய்ததாக இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு திருச்சிமத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந் நிலையில் இவர்களை பெரம்லூர் மாவட்ட கலெக்டர் ராஜேஷ் முன் அம் மாவட்டஎஸ்.பி. பன்னீர்செல்வம் ஆஜர்படுத்தினார்.

இதையடுத்து இருவரையும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் (குண்டர் தடைச் சட்டம்) கீழ் சிறையில் அடைக்க கலெக்டர்உத்தரவிட்டார். இச் சட்டத்தின் கீழ் கைதானவர்கள் ஓராண்டு காலத்துக்கு எந்த விசாரணையும் இன்றி உள்ளே தள்ளப்படுவார்கள்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+