"சிறார்" புலிகளுக்கு மறுவாழ்வு அளிக்கிறது யூனிசெப்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உள்ள சிறுவர், சிறுமிகளை சமூகத்தில் சராசரி மக்களைப் போல வாழவைப்பதற்கான முயற்சிகளை ஐக்கிய நாடுகள் அமைப்பின் குழந்தை நலப் பிரிவான யூனிசெப்மேற்கொண்டுள்ளது.

தங்கள் இயக்கத்தில் சிறுவர், சிறுமிகளை ஏராளமான அளவில் புலிகள் சேர்த்துக் கொள்வதாகப் பரவலாகக் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வந்தன. புலிகளும் இதை ஒப்புக் கொள்கின்றனர்.

தற்போது அமைதிப் பேச்சவார்த்தைகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில், புலிகள் இயக்கத்தில் உள்ள சிறுவர்,சிறுமிகளின் எதிர்காலம் குறித்த கேள்வியும் இயல்பாக எழுந்தது.

இந்நிலையில்தான் அவர்களுக்கு உதவ யூனிசெப் முன் வந்துள்ளது. மற்ற சாதாரண குழந்தைகளைப் போலவேஇந்தச் சிறுவர், சிறுமிகளையும் சமுதாயத்தில் நடமாட வைக்கும் முயற்சியைத் தாங்கள் கவனித்துக் கொள்ளப்போவதாக இந்த அமைப்பு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவரான சு.ப. தமிழ்ச் செல்வனுடன் யூனிசெப் அமைப்பைச்சேர்ந்த அதிகாரியான டெட் சாய்பான் கிளிநொச்சியில் பேச்சு நடத்தியுள்ளார்.

புலிகள் இயக்கத்தில் உள்ள சிறுவர், சிறுமிகளின் எதிர்காலம் குறித்து இந்தச் சந்திப்பின்போது பல திட்டங்கள்வகுக்கப்பட்டுள்ளன.

யூனிசெப்பின் இயக்குனரான கரோல் பெல்லாமி வரும் 30ம் தேதி கொழும்புவுக்கு வரவுள்ளார். அவரும்புலிகளின் தலைவர்களுடன் இது தொடர்பான பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோரையும் பெல்லாமிசந்திக்கவுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+