கோவில்களில் "பாக்கெட் பால்" அபிஷேகத்திற்கு தடை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கோவில்களில் கடவுளுக்கு அபிஷேகம் செய்யும்போது பாக்கெட் பாலைக் கொண்டு அபிஷேகம் செய்யக் கூடாதுஎன்றும் பசுவிடம் கறக்கப்பட்ட சுத்தமான பாலை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் தமிழக இந்துஅறநிலையத் துறை அமைச்சர் ராமசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக கோவில்களில் கடவுளுக்கு பாலாபிஷேகம் செய்வது அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சியாகும்.

இந்நிலையில் பாக்கெட் பாலைப் பயன்படுத்தி கடவுளுக்குப் பாலாபிஷேகம் செய்வதற்குக் கடும் எதிர்ப்புகிளம்பியுள்ளது.

பாக்கெட் பால் நாள்பட்டதாகவும், சுகாதாரமற்றதாகவும் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும்தனியார் பால் நிறுவனங்கள் விற்கும் பாக்கெட் பாலில் நிறைய தண்ணீர் கலக்கப்படுவதாகவும் புகார் கூறப்படுகிறது.

இதுபோன்ற பால் எப்படிப் புனிதத் தன்மையுடையதாக இருக்கும் என்று இந்து அறநிலையத் துறையில் புகார்கூறப்பட்டது.

இவ்வாறு புனிதத் தன்மையில்லாத பாலைப் பயன்படுத்தி அபிஷேகம் செய்வது கடவுளின் புனிதத் தன்மைக்குப்பங்கம் விளைவிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்துதான் பாலாபிஷேகத்திற்கு பாக்கெட் பாலைப் பயன்படுத்த இந்து அறநிலையத் துறை அமைச்சர்உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள உத்தரவில், தமிழகத்தில் உள்ள 4,500 கோவில்களிலும் நடக்கும்பாலாபிஷேக பூஜைக்கு பசு மாடுகளிடமிருந்து அன்றைக்குக் கறக்கப்பட்ட பாலை மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும் என்று ராமசாமி கூறியுள்ளார்.

சேலத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தின்போது அமைச்சர் இந்த முடிவை அறிவித்தார்.

உயிர் தப்பிய அமைச்சர்:

இதற்கிடையே, மலைப் பாதையில் திடீரென பின்னோக்கி நகர்ந்த அமைச்சர் ராமசாமியின் காரை அதிகாரிகளும்,அதிமுக தொண்டர்களும் தடுத்து நிறுத்தியதால் அவர் உயிர் தப்பினார்.

சேலம் மாவட்டம் குமரகிரி மலையில் உள்ள முருகன் கோவிலுக்கு ராமசாமி சென்றிருந்தார். கோவிலுக்குப்போகும் வழியில் அமைச்சரின் கார் மலைப்பாதையின் குறுகலான வளைவு ஒன்றில் திரும்ப முடியாமல் நின்றது.அந்த சமயத்தில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென்று பின்னோக்கி நகர ஆரம்பித்தது.

இதைப் பார்த்து அமைச்சருக்குப் பின்னால் கார்களில் வந்து கொண்டிருந்த அரசு அதிகாரிகளும், அதிமுகவினரும்அதிர்ச்சியடைந்து இறங்கி ஓடி வந்து, அந்தக் காரைப் பிடித்து நிறுத்தினர். இல்லாவிட்டால் பெரும் பள்ளத்தில் கார்கவிழ்ந்திருக்கக் கூடும்.

இதனால் அதிர்ஷ்டவசமாக அமைச்சர் உயிர் தப்பினார். பின்னர் சிறிது நேர தாமதத்திற்குப் பிறகு அமைச்சரின் கார்புறப்பட்டுச் சென்றது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+