தமிழகத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகம் முழுவதும் இன்று 54வது குடியரசு தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழக ஆளுநர் ராமமோகன் ராவ் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். அப்போது விண்ணில் பறந்து சென்ற ராணுவ ஹெலிகாப்டர்கள் தேசியக் கொடியின் மீது மலர்களைத்தூவின.

பின்னர் முப்படையினர் மற்றும் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.

கடற்கரைச் சாலையில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னை உயர் நீதிமன்றத்தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, சபாநாயகர் காளிமுத்து, அமைச்சர்கள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள்உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

கள்ளச்சாராய ஒழிப்பில் ஈடுபட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு ஜெயலலிதா "காந்தி பதக்கங்களை" வழங்கினார்.வீரதீரச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு அண்ணா பதக்கங்களும் அவரால் வழங்கப்பட்டன.

பின்னர் பள்ளி மாணவ-மாணவிகள், என்.சி.சி., என்.எஸ்.எஸ்., சாரண இயக்கத்தினர், காவல் துறையினர் கலந்துகொண்ட அணி வகுப்புகள், கலை நிகழ்ச்சிகள், கிராமியக் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றன.

குதிரைப்படை வீரர்கள், தீயணைப்பு வீரர்கள், பெண் கமாண்டோக்கள் நடத்திய அணிவகுப்புகள் கண்ணைக்கவரும் விதத்தில் அமைந்திருந்தன.

ஆயிரக்கணக்கான மக்கள் இந்நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தனர். குடியரசு தின விழா நிகழ்ச்சிகளையொட்டிகாமராஜர் சாலை மற்றும் ராஜாஜி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்பும்போடப்பட்டிருந்தது.

இதேபோல் தமிழகம் முழுவதும் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றன. மாவட்டத்தலைநகர்களில கலெக்டர்களும், மாநகரங்களில் மேயர்களும் கொடியேற்றி வைத்தனர். குடியரசுதினத்தையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+