சென்னை விமான நிலையத்தில் மர்ம பெட்டி: வெடிகுண்டா?
சென்னை:
சென்னை விமான நலையத்தில் வெடிபொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பெட்டியை பாதுகாப்புப் படையினர்மீட்டுள்ளனர். அந்தப் பெட்டி இன்று பலத்த பாதுகாப்புடன் திறந்து பார்க்கப்படவுள்ளது.
சென்னை விமான நிலையத்தின் கார்கள் நிறுத்துமிடத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருபெட்டிகிடப்பதையும், அதற்குள்ளிருந்து விநோதமான சப்தம் வருவதையும் கவனித்த சிலர் அது குறித்து விமானநிலையப் பாதுகாப்பில் இருந்த மத்தியதொழில் பாதுகாப்புப் படையினரிடம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தரப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பெட்டியைமீட்டனர். பின்னர் அந்தப் பெட்டியை குளிர்சாதன அரங்கில் வைக்க முடிவு செய்து கொண்டு சென்றனர்.
பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்ட அந்தப் பெட்டி தற்போது குளிர்சாதன அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.குளிர்பதனத்தில் இருப்பதால் வெடிகுண்டு இருந்தாலும் அது வெடிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று பலத்த பாதுகாப்புடன் அந்தப் பெட்டியைத் திறந்து பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
-->












Click it and Unblock the Notifications