மேலூரில் குண்டு வெடித்தது: தீவிரவாதிகள் சதியா?- மக்கள் பீதி
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூரில் வாரச் சந்தை நடக்கும் சந்தைப் பேட்டை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தவெடிகுண்டு வெடித்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மக்களும் பீதியடைந்தனர்.
மேலூரில் உள்ள சந்தைப் பேட்டையில் ஒவ்வொரு திங்கள்கிழமையும் வாரச் சந்தை கூடும்.
இந்நிலையில் சந்தைப் பேட்டையின் வடக்கு வாசல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று பயங்கரமானவெடிச்சத்தம் கேட்டது.
சுமார் ஒரு கி.மீ. தூரம் வரை இந்த வெடிச்சத்தம் கேட்டது. இந்த வெடிப்பால் அந்த இடத்தில் சுமார் ஒரு அடிஆழம் வரையிலும் பள்ளம் ஏற்பட்டது. அந்த இடத்திலுள்ள குப்பை கூளங்களும் உடனடியாகப் பற்றி எறியஆரம்பித்தன.
இதையடுத்து போலீசாருக்குத் தகவல் பறந்தது. வெடிகுண்டு நிபுணர்களுடன் வந்து அந்த இடத்தைப் போலீசார்ஆய்வு செய்தனர். புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு வெடிகுண்டுதான் வெடித்துச் சிதறியது என்றுஅப்போது தெரிய வந்தது.
வெடிகுண்டு வெடிப்பால் ஏற்பட்ட தீயை அணைத்த போலீசார், அந்தப் பள்ளத்தையும் உடனடியாக மூடினர்.
குடியரசு தினத்தையொட்டி இந்த வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதால், இதற்கும் தீவிரவாதிகளுக்கும்தொடர்பு இருக்கும் என்று தெரிகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தக் குண்டுவெடிப்பு சம்பவம் மேலூர் நகர மக்களிடையே பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது.
-->












Click it and Unblock the Notifications