For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

37 மகளிர் காவல் நிலையங்கள்: இன்று திறக்கிறார் ஜெ.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 37 அனைத்து மகளிர் காவல் நிலையங்களை முதல்வர்ஜெயலலிதா இன்று திறந்து வைக்கிறார்.

சென்னை-தி. நகரில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா மாம்பலம்காவல் நிலையத்தில் இன்று நடக்கிறது. அந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா கலந்துகொண்டு மகளிர் காவல்நிலையத்தைத் திறந்து வைக்கிறார்.

அப்போது, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மற்ற 36 அனைத்து மகளிர் காவல்நிலையங்களையும் ஜெயலலிதா இங்கிருந்தவாறே திறந்து வைக்கிறார்.

அதே நிகழ்ச்சியில், மகளிர் காவல் நிலைய நடமாடும்ஆலோசனைக் குழுவுக்கான முதல் வாகனத்தையும்ஜெயலலிதா வழங்குகிறார். இந்த வாகனம் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு முதல் முதலாக வழங்கப்படுகிறது.

பின்னர் இன்று மாலை நடைபெறும் மற்றொரு நிகழ்ச்சியில், புதுப்பேட்டை ஆயுதப்படை காவலர் குடியிருப்புவளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காவலர் குழந்தைகள் காப்பகத்தையும் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.

மேலும் மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள காவலர்குழந்தைகள் காப்பகத்தையும் ஜெயலலிதா இதே நிகழ்ச்சியின்போது திறந்து வைக்கிறார்.

பிப்.3ல் அண்ணாவுக்கு ஜெ. அஞ்சலி:

இதற்கிடையே, முன்னாள் முதல்வரும், திமுக நிறுவனருமான அண்ணாவின் 34வது நினைவு நாளையொட்டி வரும்பிப்ரவரி 3ம் தேதி கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியில் மலர் வளையம் வைத்து ஜெயலலிதா அஞ்சலிசெலுத்தவுள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

3ம் தேதி காலை 9 மணிக்கு அதிமுகவின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தவுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்,எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, மகளிர் அணி, மாணவர் அணி, வக்கீல்கள் அணி, சிறுபான்மையினர்பிரிவு, தொழிற்சங்க அணி, மீனவர் அணி, மருத்துவர் அணி என அனைத்து வித அணியினரும் கலந்து கொள்வர்.

மற்ற மாநிலங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கட்சியினர் அண்ணா சிலைகள் அல்லது படங்களுக்கு மாலைஅணிவித்து அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

󠣰 PQug ٶPlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X