மாதிரி பட்ஜெட் வெளியிடப் போகும் ராமதாஸ்
சென்னை:
தமிழக அரசின் பட்ஜெட் வெளியிடப்படுவதற்கு முன்பாக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாதிரி பட்ஜெட்தயாரித்து வெளியிடப்படும் என்று கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
கடந்த ஆண்டு தமிழக பட்ஜெட் வெளியிடப்படுவதற்கு முன்பே பா.ம.க. ஒரு மாதிரி பட்ஜெட்டை வெளியிட்டது.ஆனால் ஆளும் அதிமுக அரசு அதைக் கண்டுகொள்ளவே இல்லை.
இந்நிலையில் இந்த ஆண்டும் மாதிரி பட்ஜெட் ஒன்றை வெளியிடப் போவதாக ராமதாஸ் கூறினார். சென்னைவேளச்சேரியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,
தமிழக அரசின் பட்ஜெட் வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதற்கு முன்பாகவே பாட்டாளி மக்கள்கட்சி சார்பில் மாதிரி பட்ஜெட் வெளியிடப்படும்.
தமிழகத்தின் நலனுக்காகத் தீட்டப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து அதில் தெரிவிக்கப்படும். மாநில அரசுக்குஇந்த மாதிரியான பட்ஜெட் பேருதவியாக இருக்கும்.
தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் மக்களுக்கு எந்தவித பயனையும் கொடுக்காத வகையில் உள்ளன.மெரீனாவை அழகுபடுத்துகிறோம் என்ற போர்வையில் அங்குள்ள மீனவர்களை விரட்டியடிக்க முயற்சிநடக்கிறது.
மாமல்லபுரத்தில் நிர்வாக நகரம் அமைக்கப் போவதாக ஒரு திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதுவும் தேவையில்லாததிட்டமாகும். அதேபோல, புதிய வீராணம் திட்டமும் தேவையற்ற ஒன்று.
கடந்த முறை வாசிக்கப்பட்டஆளுநர் உரையில் 61 பத்திகள் இருந்தன. அது இப்போது 46 பத்திகளாக குறைந்துவிட்டது. கொள்கைகள் வகுப்பதில் அரசுக்குப் பஞ்சம் ஏற்பட்டு விட்டதையே இது காட்டுகிறது. வெறும்புகழ்ச்சிகளை மட்டுமே கொண்ட அமைச்சரவை தயாரித்து அளித்த உரையையே ஆளுநர் வாசித்துள்ளார் என்றார்ராமதாஸ்.
-->












Click it and Unblock the Notifications