குடியரசு தினம்: ஆசிரியர்கள் வராததால் கொடி ஏற்றிய வாட்ச்மேன்
மதுரை:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசுப் பெண்கள் பள்ளியில் ஆசிரியர்கள் யாரும் குடியரசு தின விழாவுக்கு வராதகாரணத்தால், மாணவிகள் முன்னிலையில் பள்ளி காவலாளியே தேசியக் கொடியை ஏற்றினார். பள்ளியின் பியூன்"சிறப்பு விருந்தினராக" கலந்து கொண்டார்.
திருமங்கலம்-உசிலம்பட்டி சாலையில் அரசுப் பெண்கள் பள்ளி உள்ளது. குடியரசு தினத்தையொட்டி இப்பள்ளிமாணவிகள் நேற்று பள்ளிக்கு வந்தனர். கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர்கள்வந்திருந்தனர்.
ஆனால் பள்ளியின் கேட் பூட்டப்பட்டிருந்தது. பள்ளி ஆசிரியர்கள் யாரும் வரவில்லை என்று பள்ளிக் காவலாளிவீரபாண்டி மாணவிகளிடம் கூறினார்.
அந்த சமயத்தில் பியூன் கணேசனும் வந்து சேர்ந்தார். வெகு நேரம் ஆகியும் 60 ஆசிரியர்களில் ஒருவர் கூடவரவில்லை என்பதை அறிந்த மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து நாமே தேசியக் கொடியேற்றி குடியரசு தினத்தைக் கொண்டாடுவோம் என்று வந்திருந்த அனைவரும்முடிவு செய்தனர்.
உடனடியாக பள்ளியின் கேட்டை காவலாளி திறந்து விட்டார். மாணவிகள் பள்ளி மைதானத்தில் குழுவினர்.கொடிக் கம்பத்தில் கொடி கட்டப்பட்டது. சுற்றிலும் தூய்மைப்படுத்தப்பட்டது.
சிலர் அருகில் இருந்த செடிகளில் இருந்த பூக்களைப் பறித்து வந்தனர். அவை தேசியக் கொடியில் கட்டப்பட்டன.
பின்னர் பியூன் கணேசனே சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள, காவலாளி வீராபாண்டி தேசியக் கொடியைஏற்ற, மாணவிகள் தேசிய கீதம் பாடி தேசத்தை கெளரவித்தனர்.
பின்னர் மாணவிகளின் சல்யூட்டுடன் தேசியக் கொடி படபடவென்று பட்டொளி வீசிப் பறந்தது. இந்தமாணவிகளிடம் ஆசிரியர்கள் பாடம் படித்துக் கொண்டு திருந்தினால் சரி.
-->












Click it and Unblock the Notifications