கோபிநத்தம் வனப் பகுதியில் அதிரடிப்படை குவிப்பு

Subscribe to Oneindia Tamil

கோபிநத்தம்:

சந்தனக் கடத்தல் வீரப்பனின் சொந்த ஊரான கோபிநத்தம் மற்றும் மாதேஸ்வரன் மலைப் பகுதிகளில் தமிழக,கர்நாடக அதிரடிப்படையினர் அவனைத் தேடி தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

கோபிநத்தம் பகுதியில் வீரப்பன் தன் கும்பலுடன் நடமாடுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்தவெள்ளிக்கிழமை இரவிலிருந்து இரு மாநில அதிரடிப்படையினரும் கூட்டாகத் தேடுதல் வேட்டையில்ஈடுபட்டுள்ளனர்.

இரண்டு நாட்களாக மலைப் பகுதியிலிருந்து வீரப்பன் கும்பல் அதிரடிப்படையினரை நோக்கித் துப்பாக்கிச் சூடுநடத்தியுள்ளனர். இதையடுத்து அதிரடிப்படையினரும் திருப்பித் தாககவே கடுமையான துப்பாக்கிச் சண்டைநடந்தது.

ஆனால் துப்பாக்கிச் சூடு நடத்தியவாறே வீரப்பன் கும்பல் அடர்ந்த காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டது. இதனால்நேற்று துப்பாக்கிச் சண்டை எதுவும் நடக்கவில்லை.

இருந்தாலும் அப்பகுதியில்தான் வீரப்பன் கும்பல் பதுங்கியிருக்கும் என்று கருதும் அதிரடிப்படையினர், அந்தப்பகுதியைச் சுற்றி வளைத்துள்ளனர். கோபிநத்தம் வனப் பகுதியை ஒட்டி அதிரடிப்படையினர் முகாமிட்டுள்ளனர்.

30 வேன்களில் சுமார் 300 போலீசார் இந்த முகாமில் தங்கி தீவிர வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.இந்தத் தேடுதல் வேட்டையின்போது போலீஸ் மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பாலாறு, கத்திரி மலை ஆகிய பகுதிகளிலும் அதிரடிப்படையினர் முழு வீச்சில் தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர்.

வீரப்பன் நடமாட்டம் குறித்து கோபிநத்தம் பகுதியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களிடம் இன்றுஅதிரடிப்படையினர் தீவிர விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

கோபிநத்தத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் அப்பகுதி மக்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் ஒன்றைநடத்தவும் அதிரடிப்படையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

மதுரை, கோவை போலீஸார் விரைவு:

இதற்கிடையே வீரப்பன் வேட்டையில் ஈடுபட்டுள்ள அதிரடிப்படை வீரர்களுக்கு உதவுவதற்காக கோயம்புத்தூர்மற்றும் மதுரையிலிருந்தும் கூடுதல் போலீஸார் கோபிநத்தம் பகுதிக்கு விரைந்துள்ளனர்.

சேலம், தர்மபுரியிலிருந்தும் சிறப்பு ஆயுதப்படை போலீஸார் கோபிநத்தம் முகாமுக்கு இன்றுஅனுப்பப்படுகின்றனர்.

வீரப்பன் மறைவிடம் குறித்து உறுதியான தகவல் கிடைத்துள்ளதால் இந்த முறை எப்படியும் அவனைப் பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் அதிரடிப்படையினர் இருக்கிறார்கள்.

ஆனால் கோபிநத்தம் பகுதிக்கு வீரப்பன் வந்தே பல ஆண்டுகளாகி விட்டன. தவறான தகவலின் அடிப்படையில்அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர் என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+