அண்ணா நினைவு நாளில் பேரணி: கருணாநிதி தலைமையில் நடக்கிறது
சென்னை:
பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி வரும் பிப்ரவரி 3ம் தேதி திமுக தலைவர் கருணாநிதிதலைமையில் அக்கட்சியினர் அமைதிப் பேரணி நடத்தி அண்ணா சமாதியில் அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
இதுதொடர்பாக தென்சென்னை, மத்தியசென்னை மற்றும் வடசென்னை மாவட்ட திமுக செயலாளர்களான சைதைகிட்டு, பரிதி இளம்வழுதி மற்றும் பலராமன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,
பேரறிஞர் அண்ணாவின் 34வது நினைவு தினம் பிப்ரவரி 3ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பேரணிஒன்றை நடத்த திமுக திட்டமிட்டுள்ளது.
அன்றைய தினம் காலை வாலாஜாபேட்டை பகுதியில் உள்ள சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்அலுவலகத்திலிருந்து கருணாநிதி தலைமையில் ஊர்வலம் கிளம்பும்.
அண்ணா நினைவிடத்தில் ஊர்வலம் முடிவடையும். பின்னர் அண்ணா சமாதியில் கருணாநிதியும் மற்றதிமுகவினரும் மலர் அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
இந்த அமைதி ஊர்வலத்தில் திமுகவின் அனைத்துத் தரப்பினரும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என்றுஅவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-->












Click it and Unblock the Notifications