தமிழை புறக்கணித்த சட்டசபையை புறக்கணித்த எதிர்க் கட்சிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆளுநர் உரை தமிழில் படிக்கப்படாததைக் கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் இன்று தமிழகசட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தன.

தமிழக சட்டசபையின் பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத் தொடர் கடந்த 23ம் தேதி ஆளுநர் உரையுடன்தொடங்கியது.

வழக்கமாக ஆளுநர் உரை முடிந்ததும் அந்த உரையைத் தமிழில் மொழிபெயர்த்து சபாநாயகர் படிப்பது வழக்கம்.ஆனால், இந்த முறை ஆளுநர் உரை தமிழில் படிக்கப்படவில்லை.

நேரமின்மை காரணமாக ஆளுநர் உரையை தமிழில் படிப்பதை ரத்து செய்துவிட்டதாக சபாநாயகர் காளிமுத்துவிளக்கமளித்தார். மேலும் மரபுகள் செளகரியத்துக்காகத் தான், செளகரியத்துக்காக மரபுகளை உடைக்கலாம்என்ற ஓட்டை வாதத்தையும் முன் வைத்தார்.

இதற்கு திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் மூன்று நாள் விடுமுறைக்குப் பின் சட்டசபை இன்று மீண்டும் கூடியது. அவை கூடிய உடன் திமுகஎம்.எல்.ஏ. துரைமுருகன் இந்தப் பிரச்சனையைக் கிளப்பினார். ஆளுநர் உரையை இந்த ஆண்டு ஏன் தமிழில்மொழிபெயர்த்துப் படிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

இதைத் தொடர்ந்து சட்டசபை எதிர்க் கட்சித் தலைவரான அன்பழகனும் எழுந்து, "தமிழ் ஆட்சி மொழியாகஇருந்தபோதிலும், ஆளுநரின் உரை தமிழில் மொழி பெயர்க்கப்படாதது வேதனையாக இருக்கிறது. அடுத்தஆண்டாவது ஆளுநர் உரையைத் தமிழில் மொழிபெயர்த்து படிப்போம் என்று தமிழக அரசு உத்தரவாதம் அளிக்கவேண்டும்" என்று கூறினார்.

ஆனால் இதற்கு சபாநாயகர் எந்தவிதமான உத்தரவாதமும் அளிக்கவில்லை. இதையடுத்து ஆளுநரின் உரைதமிழில் மொழிபெயர்க்கப்படாதது தமிழுக்கே ஏற்பட்ட இழுக்கு என்று கூறி அன்பழகன் தலைமையிலானதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

திமுகவைத் தொடர்ந்து காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிஉறுப்பினர்களும் வெளிநடப்பு செய்வதாகக் கூறிவிட்டு அவையை விட்டு வெளியேறினர். அப்போது"புறக்கணிக்காதே, புறக்கணிக்காதே... சட்டசபையில் தமிழை புறக்கணிக்காதே" எனறும் "தலைக்குனிவு,தலைக்குனிவு... தமிழுக்கே தலைக்குனிவு" என்று அவர்கள் கோஷம் போட்டுக் கொண்டே சென்றனர்.

எதிர்க் கட்சிகள் அனைத்தும் வெளிநடப்பு செய்த பின் இது தொடர்பாகப் பேசிய ஜெயலலிதா, ஆளுநர்உரையைப் புறக்கணிப்பது என்பது எதிர்க்கட்சிகளின் வழக்கமாகி விட்டது. எனவே அவரது உரையைத் தமிழில்மொழி பெயர்க்கவில்லை என்று காரணம் காட்டி இப்போது அவர்கள் புறக்கணிப்பு செய்வதும் அவர்களதுவழக்கமான செயல்களில் ஒன்றுதான்.

பிற மாநிலங்களில் ஆளுநர் உரை ஆங்கிலத்தில் மட்டுமே படிக்கப்படுகிறது. அந்தந்த மாநில மொழிகளில் படிக்கும்வழக்கம் இல்லை. அதேபோல, இங்கும் இரு மொழிகளில் படிக்க வேண்டிய தேவையில்லை, அவசியம்இல்லை. நேரமின்மை காரணமாகவே தமிழ் மொழிபெயர்ப்பு படிக்கப்படவில்லை.

மேலும் ஆளுநர் உரையை இரண்டு முறை படிக்க வேண்டும் என்று இந்திய அரசியல் சட்டத்தில் எங்கும்கூறப்பட்டிருக்கவில்லை.

தமிழில் படிக்கப்படவில்லை என்பதற்காக, தமிழக அரசுக்கு தமிழ் மொழி மீது பற்று இல்லை என்று கூறி விடமுடியாது. பிற மாநிலங்களில் அவர்களது மொழிகளில் படிக்காத காரணத்தால் அவர்களுக்கு மொழிப் பற்றுஇல்லை என்று கூற முடியுமா?

அடுத்த ஆண்டிலாவது ஆளுநர் உரையைப் புறக்கணிக்க மாட்டோம் என்று எதிர்க்கட்சிகள் உறுதி கூறட்டும்.அதற்குப் பிறகு, அடுத்த ஆண்டில் தமிழில் ஆளுநர் உரை படிக்கப்படும் என்ற உத்தரவாதம் தருவது குறித்து அரசுபரிசீலிக்கும் என்றார் ஜெயலலிதா.

இதற்கிடையே சட்டசபையை விட்டு வெளியேறிய பின் எதிர்க் கட்சித் தலைவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:

துரைமுருகன் (திமுக):

தமிழகத்தில், குறிப்பாக தமிழக சட்டசபையில் தமிழ்ப் பண்பாடு, தமிழ் உணர்வு ஆகியவை குறைந்து கொண்டேவருவதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. கேரளாவில், ஆந்திராவில், கர்நாடகத்தில், நாகலாந்தில் ஆளுநர் உரைஅவரவர் தாய்மொழியில் படிக்கப்படவில்லை என்று தமிழக அரசு விளக்கம் கூறுகிறது.

அவர்கள் எல்லாம் அப்படிச் செய்யவில்லை என்பதால்தான் தமிழக சட்டசபையில் தமிழிலும் ஆளுநர் உரையைப்படிக்கும் திட்டத்தை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். கொண்டு வந்தார். ஆனால் எம்.ஜி.ஆரின் இந்தத் திட்டத்தைமட்டுமல்லாமல் ஏராளமான திட்டங்களை ஜெயலலிதா அரசு காலாவதி ஆக்கிக் கொண்டிருக்கிறது.

தமிழை சமயம் கிடைக்கும்போதெல்லாம் வேர் அறுக்கும் செயலில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது. இதன்பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தெரியும் என்றார்.

ஜி.கே. மணி (பாமக):

நேரமின்கை காரணமாக தமிழில் ஆளுநர் உரை படிக்கப்படாது என்று அறிவித்தாவது அன்றைய சட்டசபைக்கூட்டத்தை முடித்திருக்கலாம். ஆனால் ஆளுநர் உரையைத் தமிழில் படிக்காதது மட்டுமன்றி எதுவுமே கூறாமல்அன்றைய கூட்டத்தை சபாநாயகர் முடித்து வைத்துவிட்டார். இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது என்றார்.

இதேபோலவே கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் தலைவர்களும் தமிழகஅரசைக் கடுமையாகக் கண்டித்தனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+