இந்திய- வங்கதேச படைகள் துப்பாக்கிச் சண்டை
Subscribe to Oneindia Tamil
டெல்லி & டாக்கா:
இந்திய மற்றும் வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையினர் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை மூண்டுள்ளது.
இந்தியாவில் வசித்து வரும் வங்கதேசத்தைச் சேர்ந்த அகதிகளை மீண்டும் அவர்களது நாட்டுக்குள்ளேயே இந்தியாவலுக்கட்டாயமாக திருப்பி அனுப்ப ஆரம்பித்துள்ளது. இதையடுத்து இந்தச் சண்டை மூண்டுள்ளதாகத் தெரிகிறது.
இரு நாட்டு எல்லைக்கும் இடையே உள்ள நோ மேன்ஸ் லேண்ட்டில் இந்த அகதிகளை இந்தியப் படைகள் கொண்டு போய்விட்டு வருவதாகத் தெரிகிறது. அகதிகளுடன் இந்தப் பகுதிக்குள் நுழைந்த இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரை வங்கதேசப் படைகள் தாக்கின. இதையடுத்து இந்தியப் படைகள் திருப்பிச் சுட்டு வருகின்றன.
-->












Click it and Unblock the Notifications