பவானியில் அணை: கேரள அரசுக்கு பா.ஜ.க. எம்.பி. எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் முயற்சியில் கேரள அரசு தீவிரம் காட்டுமானால், அந்த மாநிலத்திற்குஎதிராக தமிழக மக்கள் பெரும் எழுச்சியுடன் ஒன்று திரண்டு போராடும் சூழ்நிலை ஏற்படும் என்று கோயம்புத்தூர்நாடாளுமன்ற உறுப்பினரான பா.ஜ.கவைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதை எதிர்த்து கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களில்தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

நேற்று இந்த இரு மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில் அதிமுகதவிர அனைத்துக் கட்சிகளும் கலந்து கொண்டன.

இந்த நிலையில்தான் ராதாகிருஷ்ணன் கேரள அரசுக்குக் கடும் எச்சக்கை விடுத்துள்ளார். அவர் கூறுகையில்,

பரம்பிக்குளம் ஆழியாறு, பெயார் அணை விஷயங்களில் தமிழகத்தின் நலனுக்கு எதிராக கேரள அரசு நடந்துகொண்டதை உலகறியும்.

இப்போது பவானியிலும் கை வைத்து தமிழகத்தை இருண்ட மாநிலமாக்க முயற்சி செய்கிறது இந்தக் கேரள அரசு.

கேரளத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறை கிடையாது. அங்கு நிறையவே நீர் உள்ளது. ஆனால் தமிழகத்தில் அப்படிஇல்லை. ஆண்டு முழுவதும் இங்கு தண்ணீர் பிரச்சினை உள்ளது.

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டி தண்ணீரைத் திருப்பினால், கோயம்புத்தூர், ஈரோடு,திருப்பூர், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் கடும் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டு, பெரிய அளவிலானபிரச்சினைகள் உருவாகும்.

ஆனால் கேரள அரசோ இந்த உண்மை நிலையை உணராமல் தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வருகிறது.

கேரள மாநிலத்தில் உருவாகி வரும் தனியார் குளிர்பான நிறுவனத்தின் தண்ணீர்த் தேவையை பூர்த்திசெய்வதற்காகவே பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருவதுபெருத்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே காவிரி பிரச்சினை மிகப் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கோயம்புத்தூர்,ஈரோடு பகுதியிலும் இதேபோன்ற நிலைமை ஏற்படாமல் தடுக்க முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு உடனடிநடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேரள அரசு தனது முயற்சியில் தீவிரமாக இருக்குமானால், தமிழக மக்களும் மிகப் பெரும் எழுச்சியோடு அந்தமாநிலத்திற்கு எதிராகக் கடும் போராட்டத்தில் குதிக்க நேரிடும் என்றார் ராதாகிருஷ்ணன்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+