16 வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனை: உயர்நீதிமன்றம் விடுவித்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 16 வயது சிறுவனை விடுதலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சேலம் நகரைச் சேர்ந்தவன் சந்திரன் என்ற குட்டிப் பையன். கடந்த 1996ம் ஆண்டு ஜூன் மாதம் தான் காதலித்துவந்த பெண்ணை கொலை செய்ததாக இவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

காதலித்த பெண்ணுக்கு வேறொரு இடத்தில் நிச்சயம் செய்ததால் ஆத்திரமடைந்து இந்தக் கொலையை சந்திரன்செய்ததாக வழக்கில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சேலம் செஷன்ஸ் நீதிமன்றம், குட்டிப்பையனுக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்புகூறியது. குட்டிப் பையனுக்கு 16 வயது பூர்த்தியாகி விட்டதால் அவனுக்கு ஆயுள் தண்டனை அளிப்பதாக நீதிபதிதனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.

இதை எதிர்த்து குட்டிப் பையன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல்செய்யப்பட்டது.

அவன் சார்பாக ஆஜராகிய வக்கீல் துரைசாமி, குற்றம் நடந்தபோது குட்டிப் பையனுக்கு 16 வயதுபூர்த்தியாகவில்லை. இது மருத்துவரின் சான்றிதழ் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று வாதாடினார்.

பிறகு நீதிபதி தினகர் மற்றும் நீதிபதி பாலசுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் நேற்று தனதுதீர்ப்பை வழங்கியது.

அதில், சிறுவனுக்கு சேலம் நீதிமன்றம் அளித்த தண்டனையை உறுதி செய்கிறோம். இருப்பினும், சிறுவன்இப்போது 18 வயதைத் தாண்டி விட்டான்.

இந்த நலையில் அவனை சிறுவர் சீர்திருத்த சிறைக்கு அனுப்ப முடியாது. எனவே குட்டிப் பையனை விடுதலைசெய்து தீர்ப்பளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+