தமிழக வறட்சி நிலை குறித்து ஆராய மத்திய குழு இன்று வருகை
சென்னை:
தமிழக வறட்சி நிலையைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்வதற்காக மத்திய நிபுணர் குழு இன்று இரவு சென்னைவருகிறது.
தமிழகத்தில் பருவ மழை பொய்த்ததாலும், காவிரி டெல்டாப் பகுதிகளில் தண்ணீரின்றி பயிர்கள் கருகியதாலும்ஏற்பட்ட வறட்சி மற்றும் பாதிப்புகளை சரி செய்ய ரூ.400 கோடி இழப்பீட்டுத் தொகையும், 2 லட்சம் டன் உணவுதானியமும் வழங்குமாறு பிரதமர் வாஜ்பாயிடம் முதல்வர் ஜெயலலிதா கோரியுள்ளார்.
அதைத் தொடர்ந்து மத்திய குழு ஒன்று இன்று இரவு டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வருகிறது.மத்திய வேளாண்துறை இணைச் செயலாளர் ஆஷிஷ் பகுகுனா தலைமையில் குட்டி, ஓஜா மற்றும் சென் ஆகியோர்அடங்கிய 4 பேர் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவினர் நாளை காலை தமிழக முதல்வர் மற்றும் மாநில அரசு அதிகாரிகளுடன் ஆலோசனைநடத்துகிறார்கள். அதன் பிறகு தருமபுரிக்குப் புறப்பட்டுச் செல்கிறார்கள். தருமபுரி மாவட்டத்தில் வறட்சிபாதிக்கப்பட்ட பகுதிகளில் அவர்கள் ஆய்வு நடத்தவுள்ளனர்.
பின்னர் நாளை மறுநாள் சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்குச் செல்லும் குழுவினர், அங்கு வறட்சியால்பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளைப் பார்வையிடுகிறார்கள்.
கடைசியாக வரும் 31ம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வறட்சி நிலை குறித்துமத்தியக் குழுவினர் ஆய்வு மேற்கொள்வார்கள்.
இதையடுத்து பிப்ரவரி 1ம் தேதி மீண்டும் தமிழக உயர் அதிகாரிகளுடன் மத்தியக் குழுவினர் ஆலோசனைநடத்துவார்கள். பின்னர் டெல்லி திரும்பி வாஜ்பாயிடம் அவர்கள் அறிக்கையைச் சமர்ப்பிப்பார்கள்.
-->












Click it and Unblock the Notifications