• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிப்ரவரியில் இராக்கை அமெரிக்க தாக்கும்

By Staff
|

நியூயார்க்:

அமெரிக்கா எங்களைத் தாக்கினால் நாங்கள் குவைத்தைத் தாக்குவோம் என இராக் அறிவித்துள்ளது.

குவைத்தைக் காப்பாற்றுவதாகத் தான் அமெரிக்கப் படைகள் வளைகுடா நாடுகளில் காலூன்றின. இப்போது அரேபியநாடுகளின் விருப்பத்தையும் மீறி அமெரிக்கப் படைகள் அங்கு நிரந்தரமாக முகாமிட்டுவிட்டன.

இந் நிலையில் ஈராக்கில் ஆயுத சோதனைகளை முடித்துவிட்டுத் திரும்பிய ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினர் நேற்று ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் தங்களது அறிக்கையை சமர்பித்தனர்.

அதில், இராக்கிடம் பேரழிவை ஏற்படுத்தும் அணு ஆயுதங்கள் ஏதும் இல்லை. ஆனால், ரசாயன, உயிரியல் ஆயுதங்கள் குறித்தமுழு உண்மைகளையும் இராக் தெரிவிக்க மறுக்கிறது. அது குறித்து மேலும் விசாரிக்க எங்களுக்கு கால அவகாசம் வேண்டும்என்று கூறியுள்ளது.

ஆனால், கால அவகாசம் எல்லாம் தர முடியாது. தனது ஆயுதங்களை கைவிட மறுக்கும் இராக்கை தாக்குவோம் என அமெரிக்காகூறுகிறது. அதற்கு இங்கிலாந்தும் ஜால்ரா அடித்து வருகிறது.

ஆனால், ஐக்கிய நாடுகள் குழு கேட்டபடி கூடுதல் கால அவகாசத்தைத் தர வேண்டும் என ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, சீனாஆகிய நாடுகள் கூறுகின்றன. இந்தச் சோதனைகளை முழுமையாக முடித்த பின்னர் ஐ.நா. சபை என்ன முடிவு எடுக்கிறதோ அதைஅமெரிக்கா ஏற்க வேண்டும் என இந்த நாடுகள் கூறுகின்றன.

மேற்கத்திய நாடுகளே தனக்கு எதிராக நிற்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் அமெரிக்கா குழப்பத்தில் உள்ளது.ஆனாலும் தொடர்ந்து தனது படைகளை வளைகுடாவில் குவித்து வருகிறது. இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் கூட படைகளைகுவித்து வருகின்றன.

ஆனால், இத் தாக்குதலில் சேர மாட்டோம் என பிற ஐரோப்பிய நாடுகள் கூறிவிட்டன. இந் நிலையில் ஐ.நா. அனுமதிதராவிட்டாலும் தனியாக இராக்கைத் தாக்குவோம் என அமெரிக்கா மிரட்டி வருகிறது.

இந் நிலையில் அமெரிக்கத் தாக்குதலைச் சமாளிக்க இராக்கும் புகிய உத்திகளை வகுத்து வருகிறது. அமெரிக்காதாக்கும்பட்சத்தில் அதற்கு உதவியாக இருந்து வரும் குவைத்தையும், அமெரிக்காவின் சிஷ்யன் இஸ்ரேலையும் தாக்க இராக்முடிவு செய்துள்ளது.

இராக்கின் துணைப் பிரதமரான தாரிக் அஜீஸ் கனடாவின் சி.பி.சி. தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அமெரிக்கப்படைகள் குவைத்தில் முகாமிட்டுள்ளன. இதனால் எங்களை அமெரிக்கா தாக்கினால் குவைத்தை நிச்சயம் தாக்குவோம். அதற்குஎஙகளுக்கு முழு உரிமை உண்டு. எந்த நாட்டில் இருந்து வந்து எங்களைத் தாக்கினாலும் அந்த நாட்டைத் தாக்குவோம் என்றார்.

இதற்கிடையே ஐ.நா. ஆயுத ஆய்வாளர்களான ஹான்ஸ் பிலிக்ஸ் மற்றும் முகம்மத் அல்பராடெய் ஆகியோர் பிப்ரவரி 14ம் தேதிஇன்னொரு அறிக்கையை ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் தாக்கல் செய்வர். இராக் மீதான தாக்குதலைத் தவிர்க்கும் வகையில்அங்கு ஆய்வு நடத்த கூடுதல் கால அவகாசம் வேண்டும் என அல்பராடெய் கோரியுள்ளார்.

ஆனால், அமெரிக்காவை ஆதரித்து வரும் பிலிக்ஸ் அப்படி ஏதும் கோரிக்கை வைக்கவில்லை. இராக் உண்மையை மறைக்கிறதுஎன்று மட்டும் கூறியுள்ளார்.

இதனால் பிப்ரவிர 14ம் தேதிக்குப் பின் எந்த நேரமும் இராக்கை அமெரிக்கா தாக்கலாம் என்று தெரிகிறது. முதலில் ஏவுகணைகள்மற்றும் விமானங்களால் தாக்கிவிட்டு தரைப் படைகளை அமெரிக்கா அனுப்பும்.

ஆனால், கடந்த முறை மாதிரியில்லாமல் பாலைவனத்தைத் தவிர்த்துவிட்டு நகரங்களுக்குள் வைத்து அமெரிக்கப் படைகளைத்தாக்க இராக் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் அமெரிக்காவுக்கு அதிக உயிர்ச் சேதத்தை ஏற்படுத்த முடியும் என இராக்நினைக்கிறது.

இதனால் தனது ஆயுதங்களை நகர்ப் பகுதிகளில் வீடுகளுக்குள் பதுக்க ஆரம்பித்துள்ளது.

ஆனால், இராக் அதிபர் சதாம் ஹூசைனால் துன்புறுத்தப்பட்ட குர்த் இன போராளிகளை முன் நிறுத்தி அமெரிக்க பின்னால்இருந்தபடி தாக்கத் திட்டமிட்டுள்ளது. இதனால் பலியாவது குர்த் இனத்தினராகத் தான் இருப்பார்கள்.

குர்த் இனத்தினரும் முஸ்லீம்கள் தான். ஆனால், சதாம் ஹூசைனின் ஆட்சியை அவர்கள் ஆதரிக்கவில்லை. இதனால் தனதுநாட்டில் வசிக்கும் அந்த மக்களை சதாம் ஆயிரக்கணக்கில் கொன்று குவித்துள்ளார்.

இப்போது அவர்களை வைத்து சதாமைப் பழி வாங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையே ஐக்கிய நாடுகள் சபையின் எதிரேயும் உலகம் முழுவதும் போருக்கு எதிராக ஆர்பாட்டங்கள் நடந்து வருகின்றன.பெட்ரோலியத்துக்காக இராக்கை ஆக்கிரமிக்கும் செயலை அமெரிக்கா கைவிட வேண்டும் என்ற போர் எதிர்ப்பாளர்கள்கூறுகின்றனர்.

இந்தியா எதிர்ப்பு:

இந் நிலையில் இராக்கைத் தாக்கும் திட்டத்தை அமெரிக்கா கைவிட வேண்டும் என இந்தியா கூறியுள்ளது. பிரதமர் வாஜ்பாய் இதுகுறித்து கூறுகையில், போரினால் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது. இந்தப் போரினால் உலக நாடுகளின்பொருளாதாரம் பாதிக்கப்படும் என்றார்.

sS Cv _ڵ󡶵lt;/b>

-->

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X