கொலை வழக்கில் அல்-உம்மா அமைப்பினர் 9 பேருக்கு ஆயுள் தண்டனை
மதுரை:
மேலப்பாளையத்தில் பேக்கரி உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அல்-உம்மா அமைப்பைச் சேர்ந்த 9 பேருக்குஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நேற்று தான் பாஷா உள்ளிட்ட அல்-உம்மாவைச் சேர்ந்த 23 பேருக்கு சென்னை பூந்தமல்லி தனி நீதிமன்றம் வெடி குண்டுவழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
இந் நிலையில் கொலை வழக்கில் இந்த அமைப்பைச் சேர்ந்த 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம்தீர்ப்பளித்தது.
மேலப்பாளையத்தில் பேக்கரி வைத்திருந்த சத்தியசீலன் என்பவர் 2001ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி நடு ரோட்டில் ஒருகும்பலால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்திய சிறப்பு போலீஸ் படை அல்-உம்மாவைச்சேர்ந்த 9 பேரை கைது செய்தனர்.
விசாரணையில் சத்தியசீலனுக்கும் அப் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் தவறான உறவு இருந்ததாகவும் அது தொடர்பாகஅவர் மீது அல்-உம்மாவினர் கோபத்துடன் இருந்ததும் தெரியவந்தது. மேலும் ஒரு வாட்ச்மேன் கொலை செய்யப்பட்ட வழக்கில்சத்தியசீலனுக்கும் தொடர்பிருப்பதாக அல்-உம்மா அமைப்பினர் கருதினர்.
மசூதி ஒன்றின் அருகே வருடந்தோறும் அவர் விநாயகர் சிலை வைத்து பூஜை நடத்தி வந்தார். இந்தக் காரணங்களால் அவரைஅல்-உம்மா அமைப்பினர் கொலை செய்யததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இந்த வழக்கு விசாரணை மதக் கலவரங்கள் தொடர்பான மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதிலட்சுமி நாராயணன் 40 சாட்சிகளிடம் விசாரணை நடத்தினார். கத்தியால் குத்தப்பட்டுக் கிடந்த சத்தியசீலனை தனது ரிக்ஷாவில்போட்டுக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடிய ரிக்ஷா தொழிலாளி பீர் முகம்மதுவிடமும் விசாரணை நடந்தது.
இதையடுத்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளிகள் 9 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்த நீதிபதிஅவர்களுக்கு தலா ரூ. 10,000 அபராதமும் விதித்தார். இவர்கள் பாளையம்கோட்டை சிறையில் அடைக்கப்படுவார்கள்.
-->












Click it and Unblock the Notifications