எஞ்சியுள்ள பயிர்களைக் காப்பாற்ற மேட்டூர் அணை திறப்பு
மேட்டூர்:
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டாப் பகுதி பாசனத்திற்காக வினாடிக்கு 10,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
காவிரிப் பாசனப் பகுதியில் முக்கால்வாசி பயிர்கள் கருகிவிட்டன. சில ஆயிரம் ஏக்கரில் பயிர்களை மூச்சைப்பிடித்துக் கொண்டு நீருக்காக காத்திருக்கின்றன. இந்தப் பயிர்களையாவது காப்பாற்றும் முயற்சியாக மேட்டூர்அணையிலிருந்து இந்தத் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
நேற்று மாலை 6 மணிக்கு மேட்டூர் அணை திறக்கப்பட்டது. விநாடிக்கு 10,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
அணைக்கு விநாடிக்கு 3,500 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 36.24 அடியாக இருந்தது.
இந்தத் தண்ணீர் வரும் 30ம் தேதி கல்லணையை சென்றடையும். அங்கிருந்து கல்லணைக் கால்வாய் மூலம்திறக்கப்படும்.
இருப்பினும் இந்த நீரைக் கொண்டு பாதுகாக்கப்படும் பயிர்களின் அளவு மிகக் குறைவானதாகவே இருக்கும் எனவிவசாயிகள் கூறுகின்றனர்.


