Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகளிர் காவல் நிலையங்கள் முன்னோடிகளாக விளங்க வேண்டும்: ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகம் முழுவதிலும் அமைக்கப்பட்டுள்ள 37 அனைத்து மகளிர் காவல் நிலையங்களை முதல்வர் ஜெயலலிதாதொடங்கி வைத்தார்.

சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் இந்த திறப்பு விழா நடந்தது. மாம்பலம் காவல் நிலைய வளாகத்தில்அமைக்கப்பட்டுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தைத் திறந்து வைத்த ஜெயலலிதா அதே நிகழ்ச்சியில், பிற36 காவல் நிலையங்களுக்கான பெயர்ப் பலகைகளையும் திறந்து வைத்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான மகளிர் நடமாடும் காவல் நிலைய ஆலோசனைக் குழுவுக்கான வேனையும்நிகழ்ச்சியின்போதுமுதல்வர் வழங்கினார்.

மாம்பலம் மகளிர் காவல் நிலைய பார்வையாளர் பதிவேட்டில் தனது கருத்துக்களை எழுதினார் ஜெயலலிதா.

அதில், கடந்த 1992ம் ஆண்டு இந்தியாவின் முதலாவது அனைத்து மகளிர் காவல் நிலையம் தொடங்கிவைக்கப்பட்டது. பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த காவல் நிலையம் தொடங்கப்பட்டது.பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களை சிறப்புக் கவனம் செலுத்துவதே இதன் முக்கிய நோக்கம்.

காவலர்கள் என்றால் மனிதாபிமானம் உடையவர்கள், நமது நலனில் அக்கறை கொண்டவர்கள், நமக்காகஇருப்பவர்கள் என்ற எண்ணம் மக்கள் மனதில் பதியும் வண்ணம் காவலர்கள் நடந்து கொள்ள வேண்டும்.

அந்த உயரிய லட்சியம் சரியான முறையில் நிறைவேற மகளிர் காவல் நிலையங்கள் முன்னோடியாக விளங்கவேண்டும் என்று எழுதியுள்ளார் முதல்வர்.

நிகழ்ச்சிக்கு வந்த முதல்வரை தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ், உள்துறைச் செயலர் சையத் முனீர் ஹோதா,டி.ஜி.பி. ராஜகோபாலன், கூடுதல் டி.ஜி.பி. திலகவதி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயக்குமார்,அமைச்சர்கள் ஆகியோர் வரவேற்றனர்.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+