காவல் நிலையத்தில் "சயனைடு" சாப்பிட்ட திருடன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் காவல் நிலையத்தில் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்ற திருடன் உயிருக்குப்போராடி வருகிறான்.
பல்வேறு திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டவன் முருகன். இவன் சென்னை-விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவன்.நேற்று முன்தினம் இவனைப் பிடித்த போலீஸார் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்திருந்தனர்.
அப்போது திடீரென்று தான் ஒளித்து வைத்திருந்த சயனைடை எடுத்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றான்முருகன்.
இதையடுத்து போலீஸார் உடனடியாக அவனை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குஉயிருக்கு ஆபத்தான நிலையில் முருகன் போராடிவருகிறான். அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications