வீரப்பன் வேட்டை: காட்டுக்கு விரைந்தார் டி.ஜி.பி.

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தேடும் வேட்டையை நேரில் பார்வையிடுவதற்காக தமிழக காவல்துறை டி.ஜி.பி.ராஜகோபாலன் சத்தியமங்கலம் காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளார்.

வீரப்பன் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாதேஸ்வரன் மலைப் பகுதியில் அவன்பதுங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து காட்டுக்குள் தேடுதல் வேட்டையைஅதிரடிப்படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், வீரப்பனைத் தேடும் பணி குறித்து நேரில் ஆராய்வதற்காக ராஜகோபாலன் சத்தியமங்கலம்விரைந்துள்ளார்.

சத்தியமங்கலத்தில் உள்ள அதிரடிப்படை முகாமில் கூடுதல் டி.ஜி.பி. சடராஜன், காவல்துறைக் கண்காணிப்பாளர்செந்தாமரைக் கண்ணன் உள்ளிட்டவர்களுடன் டி.ஜி.பி. ஆலோசனை நடத்தினார்.

பின்னர் சத்தியமங்கலம், அந்தியூர், தட்டக்கரை, தாமரைக்கரை உள்ளிட்ட காட்டுப் பகுதிகளுக்குச் சென்றுஅங்குள்ள அதிரடிப்படை முகாமில் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார்.

பின்னர் மேட்டூர் முகாமுக்கும் செல்லும் அவர் அங்கு கர்நாடக அதிரடிப்படை ஆலோசகர் ஸ்ரீனிவாசுலு, அம்மாநிலஅதிரடிப்படைத் தலைவர் மிர்ஜி ஆகியோரையும் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

கேரள வனப் பகுதியில் வீரப்பன்?

இதற்கிடையே வீரப்பன் கேரள வனப் பகுதிக்குள் ஊடுருவலாம் என்று கிடைத்த தகவல்களைத் தொடர்ந்துஅம்மாநிலப் போலீசார் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

தமிழக, கர்நாடக அதிரடிப்படையினருடன் இணைந்து கேரளப் போலீசாரும் எல்லைப் பகுதிகளில் தீவிரக்கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக கேரள சட்டசபையில் அம்மாநில முதல்வர் ஏ.கே. ஆண்டனி அறிவித்தார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+