பவானியில் அணை கட்ட கேரளத்துக்கு மத்திய அரசு தடை
டெல்லி:
பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் பணியை உடனே நிறுத்துமாறு கேரள அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்தக்கட்டுமானப் பணிகள் உடனடியாக நிறுத்தப்படுகின்றன.
முக்காலி என்ற இடத்தில் இந்த அணையைக் கட்டி தமிழகத்துக்கு நீர் செல்வதைத் தடுக்க கேரளம் முயன்று வருகிறது. இதற்கு கோவை,ஈரோடு, கோபி உள்ளிட்ட பகுதிகளில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. அணைக்கட்டுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன.
நிலைமை மோசமடைவதற்குள் இதில் மத்திய அரசு தலையிட்டது. மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் டி.ஆர். பாலு தனது அமைச்சகத்தின்உயர் அதிகாரிகள் குழுவை கேரளாவுக்கு அனுப்பி ஆய்வு நடத்த உத்தரவிட்டார்.
அந்தக் குழு முக்காலி பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்தியது. இந்த அணை கட்டும் பணியில் சுற்றுச்சூழல் துறையின் விதிமுறைகள்மீறப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்தது.
கால்வாயை திசை திருப்புவாதச் சொல்லி பெங்களூரில் உள்ள மண்டல வன அதிகாரியிடம் அனுமதி வாங்கிவிட்டு அங்கு கேரளம்அணையை கட்டி வருவதும், மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதி இல்லாமல் மிகப் பெரிய மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டுள்ளதும்,இதனால் பயங்கர மண் அரிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து தங்களது ஆய்வறிக்கையை அதிகாரிகள் டி.ஆர். பாலுவிடம் சமர்பித்தனர். இதையடுத்து இப் பிரச்சனையை பிரதமரிடம்எடுத்துச் சென்றார் பாலு. இதைத் தொடர்ந்து அணை கட்டும் பணியை உடனே நிறுத்துமாறு கேரள அரசுக்கு மத்திய அரசுஉத்தரவிட்டுள்ளது.
இன்று இதற்கான உத்தரவு டெல்லியில் இருந்து திருவனந்தபுரத்துக்குப் பறந்தது. மத்திய அரசின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஜே.பி.தாக்கூர் இதற்கான உத்தரவை கேரளத்துக்கு அனுப்பினார். கேரளாவின் தலைமை வன அதிகாரிக்கு இது தொடர்பான உத்தரவு தந்தி மூலம்அனுப்பப்பட்டுள்ளது.
இத் தகவலை திமுக முன்னாள் அமைச்சரும் அணைக்கட்டுக்கு எதிரான போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தி வருபவருமானபொங்கலூர் பழனிச்சாமி நிருபர்களிடம் தெரிவித்தார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications