தமிழக காங்கிரஸ்: இங்கே எல்லோரும் தலைவர்களே!
சென்னை:
தமிழக காங்கிரஸ் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம்உள்ளது.
இந்தியாவில் எந்தக் கட்சியிலும் இல்லாத வகையில் காங்கிரஸ் கட்சிக்குத்தான் அதிக அளவில் நிர்வாகிகள்இருக்கிறார்கள். அதிலும் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட மாநில நிர்வாகிகள்இருக்கிறார்கள். கட்சிக்கு மொத்தமே இத்தனைத் தொண்டர்கள் இருப்பார்களா என்பதே சந்தேகம் தான்!.
எல்லா கோஷ்டிகளுக்கும் நிர்வாகிகள் பட்டியலில் இடம் தருவதற்காக இத்தனை பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் இளங்கோவன் தனக்குடீ வாங்கித் தந்தவர்களை எல்லாம் நிர்வாகியாக்கிவிட்டார் என்று சோ.பாலகிருஷ்ணன் தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இத்தனை பேரை நிர்வாகிகளாகப் போட்ட பின்னரும் அதில் என் பெயர் இல்லை, என் ஆதரவாளர் பெயர் இல்லை என டெல்லிக்குமொட்டை பெட்டிசன்களும் புகார் கடிதங்களும் போன வண்ணண் உள்ளன.
இதனால் மேலும் பலரை நிர்வாகிகளாக்கி அனைவரையும் சமரசப்படுத்த புதிய திட்டத்தைத் தீட்டியுள்ளது அகிலஇந்திய காங்கிரஸ் கமிட்டி. அதன்படி தற்போதுள்ள 54 மாவட்ட காங்கிரஸ் குழுக்கக்கள் தவிர மேலும் 18கோட்டங்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதாவது சென்னைக் கோட்டம், மதுரைக் கோட்டம், கோவை கோட்டம் என பிரித்து, அந்தக் கோட்டங்களுக்குக்கீழே சம்பந்தப்பட்ட மாவட்டங்கள் செயல்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த ஒவ்வொரு கோட்டத்திற்கும் 106 தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள். இவர்களது வேலை, மாவட்டகுழுக்களைத் தட்டிக்கொடுத்து நல்ல முறையில் கட்சிப் பணிகளை கவனிப்பதாம்.
சாத்தான்குளம்: இன்று "இன்டர்வியூ"
இதற்கிடையே சாத்தான்குளம் இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விண்ணப்பித்துள்ள 22பேரிடமும் இன்று (புதன்கிழமை) நேர்முகத் தேர்வு நடந்தது. காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணனும் செயல்தலைவர் இளங்கோவனும் இந்த இன்டர்வியூவை நடத்தினர்.
இதில் தேர்வு செய்யப்படும் நபர்களின் விவரத்தை டெல்லிக்கு அனுப்பி அங்கு வேட்பாளர் இறுதி செய்யப்பட்டுஓரிரு நாட்களில் அறிவிக்கப்படுவார்.
இந்தப் பணிகளை மேற்பார்வையிட அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரமேஷ் சென்னிதாலா சென்னைவந்துள்ளார்.
போட்டியில்லை: டாக்டர் கிருஷ்ணசாமி
இந் நிலையில் சாத்தான்குளம் இடைத் தேர்தலில் புதிய தமிழகம் போட்டியிடாது என்று அக்கட்சித் தலைவர்டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சாத்தான்குளத்தில் நடக்கவுள்ள தேர்தலை பயன்படுத்தி அதிமுக அரசுக்குபாடம் கற்பிக்க எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படும்.
ஆனால், அதிமுகவுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட காங்கிரஸ் கட்சி தவறி விட்டது. அனைத்துஎதிர்க்கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்தோ அல்லது கடிதம் மூலமாகவோ, தொடர்பு கொண்டுசாத்தான்குளம் தேர்தலுக்கு ஆதரவு திரட்ட காங்கிரஸ் முயற்சிக்க வேண்டும்.
அதிமுகவுக்கு எதிரான ஓட்டுக்கள் சிதறி விடக் கூடாது என்பதால் சாத்தான்குளத்தில் நங்கள் போட்டிடவில்லை.எங்களுக்கு அங்கு 18,000 ஓட்டுக்களும் உள்ளன என்றார்.
வேட்புமனு தாக்கல்:
இதற்கிடையே சாத்தான்குளத்தில் வேட்பு மனுத் தாக்கல் நாளை மறு தினம் தொடங்குகிறது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications