உலக கோப்பை: தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி
ஜோகன்னஸ்பர்க்:
வரும் பிப்ரவரி 8ம் தேதி துவங்கவுள்ள உலகக் கோப்பை ஒருநாள் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக இந்தியஅணி வீரர்கள் இன்று தென் ஆப்பிரிக்கா வந்து சேர்ந்தனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) ஒப்பந்தம் தொடர்பாக ஏற்பட்ட பலத்த சர்ச்சைகளைத் தொடர்ந்துஉலகக் கோப்பை போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடுமா, இல்லையா என்ற பலத்த கேள்விஎழுந்தது.
ஆனால் ஐ.சி.சி. இறங்கி வந்ததைத் தொடர்ந்து அனைத்துச் சிக்கல்களும் தீர்ந்தன. உலகக் கோப்பை போட்டிகளில்இந்திய அணி விளையாடும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் செளரவ் கங்குலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணியினர் இன்று அதிகாலை தென்ஆப்பிரிக்காவுக்குப் புறப்பட்டனர். மும்பை விமான நிலையத்தில் ஏராளமான இந்திய கிரிக்கெட் ரசிகர்களைஅவர்களை மகிழ்ச்சியோடு வழியனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்திய அணியினர் தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு வந்து சேர்ந்தனர். அவர்களுக்குவிமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தென் ஆப்பிரிக்காவில் உள்ள இந்திய கிரிக்கெட் ரசிகர்களும், அங்குள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளும்கிரிக்கெட் வீரர்களை அன்புடன் வரவேற்று, தங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
விமான நிலையத்தில் நிருபர்களிடம் கங்குலி பேசுகையில், "நியூஸிலாந்தில் இந்திய அணி அடைந்த தோல்விகளின்மூலம் அதை மோசமான அணி என்று நினைத்துவிடக் கூடாது. இந்தத் தோல்விதான் வெற்றிக்கு அறிகுறி என்றுநினைத்துக் கொண்டு, உலகக் கோப்பையை வெல்வதற்காக அனைத்து வீரர்களும் கடுமையாக உழைப்போம்"என்றார்.
பின்னர் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் டர்பன் நகருக்குப் புறப்பட்டுச் சென்றனர். போட்டிகள் தொடங்கும் வரைடர்பனில்தான் அவர்கள் இருப்பார்கள்.
இந்தியா முதலில் ஹாலந்தை எதிர்த்து பிப்ரவரி 12ம் தேதி ஆடவுள்ளது. பார்ல் என்ற நகரில் உள்ள போலண்ட்பார்க் மைதானத்தில் இப்போட்டி நடக்கவுள்ளது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications