யாரும் எலிக்கறி சாப்பிடவில்லை என்கிறார் ஜெயலலிதா
சென்னை:
காவிரி டெல்டாப் பகுதி விவசாயிகள் எலிக்கறி சாப்பிடும் அளவுக்கு நிலைமை மோசமாகவில்லை, அதற்கு அரசும் அனுமதிக்காது என்றுமுதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஆனால், எலிகளுக்குக் கூட தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நண்டு, நத்தைகளை மக்கள் சாப்பிட்டு வருகின்றனர். இதை ஜெயலிலதாமறுக்கிறார்.
இன்று சட்டசபையில் பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர் கணேசன் இப் பிரச்சனையைக் கிளப்பினார். டெல்டா பகுதியில் தாண்டவமாடும்வறட்சியால் விவசாயிகள் எலிக்கறியை சாப்பிடும் அளவுக்கு மோசமான நிலையில் உள்ளனர் என்றார்.
அப்போது குறுக்கிட்ட ஜெயலலிதா, அந்த அளவுக்கு இன்னும் நிலைமை மோசமடையவில்லை. நிலைமை அந்த அளவுக்கு செல்ல அரசும்அனுமதிக்காது. வறட்சி நலையை சமாளிக்க போதுமான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. மத்திய நிபுணர் குழுவும் தமிழகம் வந்துள்ளது.
இந்தக் குழுவினர் நாளை மறுதினம் என்னை சந்திப்பர். அப்போது தமிழகத்துக்கு வறட்சி நிவாரணம் கோரி மத்திய அரசுக்கு புதிய மனுவைகொடுப்பேன் என்றார். ஜெயலலிதா.
தர்மபுரியில் மத்திய ஆய்வுக் குழு:
இதற்கிடையே, காவிரி டெல்டா பகுதிகள் மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளில் வறட்சி நிலையைப் பார்வையிட வந்துள்ள மத்திய குழுஇன்று தர்மபுரி மாவட்டத்தில் தனது ஆய்வை மேற்கொண்டது.
மத்திய விவயாசத்துறை இணைச் செயலாளர் அஜீத் பகுகுனா தலைமையில் 4 பேர் குழு நேற்றிரவு சென்னை வந்தது. இன்று காலை தர்மபுரிமாவட்டம் மொரப்பூர் சென்ற இவர்கள் வறட்சி பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டனர்.
பின்னர் அங்கிருந்து கடப்பூர், மும்மிடி உள்ளிட்ட சில கிராமங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். காய்ந்த வயல்களையும், கருகியதென்னந் தோப்புகளையும் நிபுணர் குழுவிடம் காட்டிய விவசாயிகள் குடிக்கக் கூட தண்ணீர் கிடைக்காமல் தாங்கள் அவதியுற்று வருவதைஎடுத்துக் கூறினர்.
இதை கலக்கத்துடன் பார்த்த அதிகாரிகள் பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் சித்திக்குடன் ஆலோசனை நடத்தினர். இன்று இரவு சேலம்புறப்பட்டுச் செல்லும் இவர்கள் மேட்டூர் அணையையும் பார்வையிடுவர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications