மாலத்தீவு சிறையில் வாடும் தமிழர்கள்: வைகோ குமுறல்
சென்னை:
மாலத் தீவுகளில் சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு வரும் 250 இந்தியர்களையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கைஎடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வேலூர் மத்தியச் சிறையில் இருந்து வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
தமிழகத்தின் தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருவாவூர், புதுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த 104 பேரும் மேலும் சுமார் 146 பிறமாநிலத்தவர்களும் மாலத் தீவுகளில் வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
நல்ல வேலை, நல்ல சம்பளம் என்று உறுதி மொழி தந்ததால் ஏஜெண்டுகளுக்கு பல ஆயிரத்தைக் கொடுத்து இவர்கள் அங்கு போய்ச்சேர்ந்தனர். ஆனால், இவர்களை அந்த மோசடி ஏஜெண்டுகள் ஏமாற்றிவிட்டனர்.
மாலத்தீவுகள் போய் இறங்கிய இவர்களுக்கு ஆடு, மாடு மேய்க்கும் பணி தான் தரப்பட்டது. சரியான உணவு கூட தரப்படவில்லை. மிகச்சொற்பமான ஊதியம் தரப்பட்டது. இதை எதிர்த்து குரல் கொடுத்ததால் அவர்களை இருட்டறை கொண்ட சிறைகளில் அந் நாட்டு அரசுஅடைத்துள்ளது.
இருட்டு அறைக்குள் நீண்ட காலமாக அடைக்கப்பட்டிருக்கும் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு காநோய் வந்துள்ளது. அதைகுணப்படுத்தவும் சிறை நிர்வாகம் முன்வரவில்லை. இதனால் கைதிகள் சொல்ல முடியாத அளவுக்கு துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
பல பெண் கைதிகள் பாலியல் பலாத்காரத்திற்கும் ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களை சிறைகளில் இருந்து மீட்கவும் திரும்ப நாடுகொண்டு வரவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு வைகோவின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications