கர்நாடக வனப் பகுதியில் வீரப்பன் நடமாட்டம்?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

தமிழக, கர்நாடக எல்லையில் உள்ள பொன்னாச்சி வனப் பகுதியில் வீரப்பன் கும்பலின் நடமாட்டம்தென்படுவதாக வந்த தகவலைத் தொடர்ந்து கர்நாடக அதிரடிப்படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையைத்தீவிரப்படுத்தியுள்ளனர்.

கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா வீரப்பனால் கடத்தப்பட்டு, பின்னர் மர்மமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து வீரப்பனைத் தேடும் வேட்டையை இரு மாநில அரசுகளும் தீவிரப்படுத்தியுள்ளன.

கடந்த வாரம் தன்னுடைய சொந்த ஊரான கோபிநத்தம் பகுதியில் வீரப்பன் நடமாட்டம் இருந்ததாக வந்ததகவலையடுத்து, அப்பகுதி முழுவதையும் தமிழக அதிரடிப்படையினர் சுற்றி வளைத்தனர்.

கோபிநத்தம், சத்தியமங்கலம், அந்தியூர் வனப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட தமிழக அதிரடிப்படையினர்முகாம்களை அமைத்து தீவிர வீரப்பன் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

தேடுதல் வேட்டையை நேரில் பார்ப்பதற்காக தமிழக டி.ஜி.பியான ராஜகோபாலன் அந்தப் பகுதிகளுக்குச்சென்றார். அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் அவர் ஆலோசனையும் நடத்தினார்.

இந்நிலையில் பொன்னாச்சி வனப் பகுதியில் வீரப்பன் கும்பல் நடமாடிக் கொண்டிருப்பதாக கர்நாடகஅதிரடிப்படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அப்பகுதியை கர்நாடக அதிரடிப்படையினர்சுற்றி வளைத்துள்ளனர்.

கர்நாடக அதிரடிப்படை தலைவரான ஜோதிப்பிரகாஷ் மிர்ஜி தலைமையிலான போலீசார் நேற்று இரவு முழுவதும்இப்பகுதியில் தேடுதல் வேட்டையை நடத்தினார்கள்.

அப்பகுதியில் அவர்கள் முகாம் அமைத்து வீரப்பனைத் தேடும் வேட்டையில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+