"சிறார்" புலிகள்: இலங்கையில் "யூனிசெப்" தலைவர்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஐக்கிய நாடுகள் அமைப்பின்குழந்தைகள் பிரிவான "யூனிசெப்"பின் இயக்குனரான கரோல் பெல்லாமி சந்தித்தார்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உள்ள சிறுவர், சிறுமிகளை சமூகத்தில் சராசரி மக்களைப் போல வாழவைப்பதற்கான முயற்சிகளை ஐக்கிய நாடுகள் அமைப்பின் குழந்தை நலப் பிரிவான யூனிசெப்மேற்கொண்டுள்ளது.

தற்போது அமைதிப் பேச்சவார்த்தைகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில், புலிகள் இயக்கத்தில் உள்ள சிறுவர்,சிறுமிகளின் எதிர்காலம் குறித்த கேள்வியும் இயல்பாகவே எழுந்தது.

இந்நிலையில்தான் அவர்களுக்கு உதவ யூனிசெப் முன் வந்துள்ளது. மற்ற சாதாரண குழந்தைகளைப் போலவேஇந்தச் சிறுவர், சிறுமிகளையும் சமுதாயத்தில் நடமாட வைக்கும் முயற்சியைத் தாங்கள் கவனித்துக் கொள்ளப்போவதாக இந்த அமைப்பு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவரான சு.ப. தமிழ்ச் செல்வனுடன் யூனிசெப் அமைப்பைச்சேர்ந்த அதிகாரியான டெட் சாய்பான் என்பவர் ஏற்கனவே கிளிநொச்சியில் பேச்சு நடத்தியுள்ளார்.

புலிகள் இயக்கத்தில் உள்ள சிறுவர், சிறுமிகளின் எதிர்காலம் குறித்து இந்தச் சந்திப்பின்போது பல திட்டங்கள்வகுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பெல்லாமி இன்று காலை இலங்கைக்கு வந்தார். போரினால் பாதிக்கப்பட்ட 1,000க்கும் மேற்பட்டகுழந்தைகளை அவர் இன்று சந்தித்துப் பேசினார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயை இன்று மாலை சந்திக்கிறார் பெல்லாமி. பின்னர் நாளை புலிகளின்கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு அவர் சென்று புலிகளின் முக்கியத் தலைவர்களுடன் பேச்சுநடத்துகிறார்.

இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவையும் பெல்லாமி சந்திக்கவுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+