பாரதிராஜா தொடர்ந்த வழக்கில் நடிகை ராதிகா நீதிமன்றத்தில் ஆஜர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இயக்குநர் பாரதிராஜா தொடர்ந்த வழக்கில் நடிகை ராதிகா சென்னை-எழும்பூர் 13வது பெருநகர நீதிமன்றத்தில்ஆஜரானார்.

காவிரியில் தமிழகத்திற்கு கர்நாடக அரசு நீரைத் திறந்துவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஆண்டுஅக்டோபர் 12ம் தேதி நெய்வேலியில் திரையுலகினர் மாபெரும் பேரணிப் போராட்டத்தை நடத்தினார்கள்.

பாரதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ராதிகா, டி. ராஜேந்தர் போன்றோர் கலந்துகொள்ளாமல் கடைசி நேரத்தில் டிமிக்கி கொடுத்துவிட்டனர்.

இந்நிலையில் 13ம் தேதி சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அவருக்குவாழ்த்து தெரிவிக்க வந்த ராதிகா, பின்னர் நிருபர்களிடம் பேட்டியளித்த போது பாரதிராஜாவைக் கடுமையாகத்திட்டினார். அவர் கூறுகையில்,

நெய்வேலியில் திரண்ட கூட்டம், பாரதிராஜாவுக்காக வந்த கூட்டமா? இல்லை. நடிகர்களுக்காக வந்த கூட்டம்.அவர் எங்காவது தனியாக நின்று பார்க்கட்டும், எவ்வளவு கூட்டம் வருகிறதென்று நாமும் பார்ப்போம்.

மேலும் நெய்வேலிக் கூட்டத்தில் இவர் காவிரி பிரச்சனையை விட்டுவிட்டு சொந்தக் கதைகளை எல்லாம்பேசுகிறார்.

யாரிடமோ (தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்துதான்) பணம் வாங்கிக் கொண்டு தான் பாரதிராஜாஇப்படியெல்லாம் பேசியுள்ளார். இதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.

தமிழனுக்கு எதிரி தமிழனேதான் என்று சொல்வார்களே, அது பாரதிராஜா தான் என்றார் ராதிகா.

இந்நிலையில் ராதிகாவுக்கு தன் வக்கீல் பாஸ்கர் மூலம் பாரதிராஜா நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார். அந்தநோட்டீசில்,

ஜெயலலிதாவிடம் நான் பணம் வாங்கிவிட்டதாகவும், அதை நெய்வேலி பொதுக் கூட்டத்தில் நானே ஒப்புக்கொண்டதாகவும் என்னைப் பற்றி அவதூறாகப் பேசியுள்ளார் ராதிகா.

கடந்த 25 ஆண்டுகளாக நான் சேர்த்து வைத்திருந்த பெயர், புகழ், மரியாதை ஆகியவற்றைக் குலைக்கும் விதமாகராதிகா பேட்டி அளித்துள்ளார்.

தமிழ் மக்கள் மத்தியில் உள்ள என் பெயரைக் களங்கப்படுத்திய ராதிகா அதற்கு நஷ்ட ஈடாக எனக்கு ரூ.5 கோடிதரவேண்டும் என்று அந்த நோட்டீசில் பாரதிராஜா கூறியிருந்தார். மேலும் இது தொடர்பாக எழும்பூர்நீதிமன்றத்திலும் அவர் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இதையொட்டி ராதிகா நீதிமன்றத்தில் ஆஜரானார்.

பின்னர் இவ்வழக்கின் விசாரணையை வரும் பிப்ரவரி 20ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+