தொலைத் தொடர்பு, தகவல் தொழில்நுட்ப அமைச்சரானார் திருநாவுக்கரசர்
டெல்லி:
மத்தியில் மாற்றி அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் தமிழகத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசருக்கு மிக முக்கியதுறைள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதுவரை கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சராக இருந்த திருநாவுக்கரசருக்கு தற்போது தொலைத்தொடர்புத்துறையும் தகவல் தொழில்நுட்பத் துறையும் (Information technology) வழங்கப்பட்டுள்ளன. இந்தத்துறைகளின் இணையமைச்சராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் துறைகளின் காபினெட் அமைச்சராக அருண் ஷோரி நியமிக்கப்பட்டுள்ளது. இத்துடன் தனியார்மயமாக்கல்துறையயையும் ஷோரியே கவனிப்பார்.
செல்போன், தொலைத் தொடர்புத்துறையில் தனியார் நிறுவனங்கள் வேகமாக நுழைந்து வரும் நிலையில் இத்துறைகளை கையில் வைத்துள்ள அருண்ஷோரி மத்திய அமைச்சரவையில் மிகவும் பலம் பொறுந்தியஅமைச்சர்களில் ஒருவராக மாறியுள்ளார்.
மத்திய அமைச்சரவை நேற்று மாலை மாற்றியமைக்கப்பட்டது. இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் பல மாநிலசட்டசபைத் தேர்தல்களை மனத்தில் கொண்டு பிரதமர் வாஜ்பாய் இந்த மாற்றத்தைச் செய்துள்ளார்.
ஜனா vs வாஜ்பாய்:
தமிழகத்தைச் சேர்ந்த ஜனா கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து சட்ட அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. தன்பதவியைக் காப்பாற்றிக் கொள்ள அவர் கடைசி வரை எவ்வளவோ முயன்றார்.
ஆனால், சட்டத்துறை தவிர வேறு எந்த இலாகாவை அவர் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டதால் அவருடையராஜினாமாவை ஏற்க நேர்ந்ததாக வாஜ்பாய் கூறினார். ஆனால், நான் அப்படிச் சொல்லவே இல்லை என ஜனாமறுத்துள்ளார்.
அவர் இன்று நிருபர்களிடம் பேசுகையில், எனக்கு ஏன் பதவி தரப்படவில்லை என்ற உண்மையை நான் வெளியில்சொல்லப் போவது இல்லை. நான் சட்ட அமைச்சர் வேண்டும் என்றெல்லாம் கேட்கவே இல்லை.
அவரும் என்னிடம் அதைப் பற்றி பேசவே இல்லை. கட்சி விரும்பும் வரை எம்.பியாக இருப்பேன். எந்தப்பதவிக்காகவும் நான் அலைந்தது இல்லை. எனக்கு உடல் நிலை சரியில்லாததால் பதவி பறிக்கப்பட்டதாகக்கூறுவதும் தவறு. யார் தான் நல்ல உடல் நிலையில் இருக்கிறார்கள். இனி நான் என் குடும்பத்தோடு மகிழ்ச்சியாய்இருப்பேன் என்றார்.
இதனால் இவரது பதவி பறிக்கப்பட்டதன் பின்னணியில் ஏதோ மோதல் நடந்திருப்பது தெளிவாகிறது.
ஜனா நீக்கப்பட்டதால் மத்தியில் உள்ள தமிழக அமைச்சர்களின் எண்ணிக்கையில் ஒன்று குறைந்துள்ளது.
அமைச்சரவையில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ள அருண் ஜேட்லிக்கு மீண்டும் அவர் முன்பு வகித்து சட்டத் துறைவழங்கப்பட்டுள்ளது.
மாறனுக்கு இலாகா இல்லை:
மேலும் முரசொலி மாறன் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதால் அவருடைய தொழில் மற்றும் வர்த்தகத் துறைகளும் ஜேட்லியிடமே கொடுக்கப்பட்டுள்ளன.
இலாகா எதுவும் இல்லாத கேபினட் அமைச்சராகத் தொடர்ந்து அமைச்சரவையில் நீடிப்பார் மாறன்.
எதிர்பார்க்கப்பட்டது போலவே சத்ருகன் சின்ஹாவிடம் இருந்து நலத்துறை பறிக்கப்பட்டுள்ளது. அவர் கப்பல்போக்குவரத்துத்துறை அமைச்சராக்கப்பட்டுள்ளார்.
மீண்டும் அமைச்சராகிள்ள சி.பி. தாகூருக்கு வட கிழக்கு விவகாரங்கள் துறையும் சிறுதொழில்துறையும்தரப்பட்டுள்ளன.
சுஷ்மா சுவராஜின் கையும் ஓங்கியுள்ளது. இதுவரை செய்தி ஒளிபரப்பு அமைச்சராக இருந்த அவருக்குநாடாளுமன்ற விவகாரத்துறையும் நலத்துறையும் தரப்பட்டுள்ளன.
அதிகாரம் இழந்த மகாஜன்:
மத்திய அமைச்சரவையில் மிக பலத்துடன் இருந்த பிரமோத் மகாஜன் நீக்கப்பட்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக்கப்பட்டுள்ளார். இவர் வசம் இருந்த தகவல்தொழில்நுட்பம், நாடாளுமன்ற விவகாரத்துறை,தொலைத் தொடர்புத்துறை ஆகியவை பிரிக்கப்பட்டு இரு அமைச்சர்களிடம் தரப்பட்டுவிட்டன.
8 அமைச்சர்கள் நீக்கம்:
அமைச்சரவை மாற்றத்தில் பிரமோத் மகாஜன், ஜனா தவிர மேலும் 6 பேர் பதவி விலக்கப்பட்டுள்ளனர்.
உமா பாரதி, வசுந்தரா ராஜே சிந்தியா ஆகியோர் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் முதல்வர் பதவிகளுக்குநிறுத்தப்பட உள்ளனர்.
இவர்கள் தவிர வேதபிரகாஷ் கோயல், ராமன்சிங், ரீட்டா வர்மா, நிகில் செளத்ரி ஆகியோரும் அமைச்சர்பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
பிரதமரிடம் சி.பி.ஐ:
அமைச்சரவை மாற்றத்தின்போது தன்னிடம் உள்ள சி.பி.ஐ. பொறுப்பை வாஜ்பாயே தொடர்ந்து வைத்துக் கொண்டுள்ளார்.
மத்திய பென்சன் துறை அமைச்சகத்தின் கீழ் தான் சி.பி.ஐ. வருகிறதுய இந்தத் துறையை துணைப் பிரதமர் அத்வானிக்குத் தந்துள்ள வாஜ்பாய் சி.பி.ஐ பொறுப்பைஅவரிடம் தரவில்லை. அதைத் தன் வசமே வைத்துக் கொண்டுள்ளார்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரத்தை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இதனால் அதை அத்வானியிடம் வாஜ்பாய் வழங்கவில்லை என்றுதெரிகிறது.
-->












Click it and Unblock the Notifications