மின் ரயிலில் தொங்கிக் கொண்டு சென்ற 2 மாணவர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் மின்சார ரயிலில் தொங்கிக் கொண்டு பயணம் செய்த 2 கல்லூரி மாணவர்கள் சிக்னல் ஏணியில்மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடி வருகின்றனர்.

தாம்பரத்திலிருந்து பூங்கா ரயில் நிலையத்தை நோக்கி நேற்று மாலை ஒரு மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது.இதில் சில கல்லூரி மாணவர்கள் வழக்கம் போலவே ரயில் பெட்டியின் வாசலில் தொங்கிக் கொண்டே பயணம்செய்தனர்.

நுங்கம்பாக்கம் அருகே இந்த ரயில் வந்துகொண்டிருந்தபோது, தண்டவாளத்தை ஒட்டி வளைந்த நிலையிலிருந்தஒரு சிக்னல் ஏணியில் தொங்கிக் கொண்டு வந்த மாணவர்கள் பலமாக மோதினார்கள்.

மோதிய வேகத்திலேயே எட்டு மாணவர்கள் அந்த ரயிலை விட்டு கீழே வீசி எறியப்பட்டனர். இதையடுத்து ரயில்உடனடியாக நிறுத்தப்பட்டது.

படுகாயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த எட்டு மாணவர்களும் உடனடியாக அரசுமருத்தவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். ஆனால் மருத்தவமனைக்குச் செல்லும் வழியிலேயே ஜீவானந்தம்என்ற மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மற்ற ஏழு மாணவர்களுக்கும் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர்களில்சாத்தூரைச் சேர்ந்த மணிகண்டன் என்ற மாணவர் இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

காயமடைந்தவர்களில் ராஜ்குமார் மற்றும் ஜான் என்ற மற்ற இரண்டு மாணவர்களின் நிலையும் கவலைக்கிடமாகஉள்ளதாகக் கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் தென்னக ரயில்வே அதிகாரிகளும் போலீசாரும் அந்த இடத்திற்குச் சென்றுதீவிர விசாரணை நடத்தினர். தண்டவாளத்தை ஒட்டி வளைந்த நிலையில் இருந்த சிக்னல் ஏணி உடனடியாகஅகற்றப்பட்டது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+