சென்னை மாநகராட்சியில் திமுக உறுப்பினர்களை தாக்க முயன்ற அதிமுக கவுன்சிலர்
சென்னை:
தமிழக சட்டசபையில் த.மா.கா.கா. தலைவர் டாக்டர் குமாரதாசை திமுக எம்.எல்.ஏவான பரிதி இளம்வழுதி தாக்கமுயற்சி செய்த நிலையில், சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் திமுக உறுப்பினர்களைத் தாக்க அதிமுக கவுன்சிலர்முயன்றார்.
இதையடுத்து திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் இன்று காலைவழக்கம்போல் தொடங்கியது.
கூட்டம் தொடங்கியதும் பேசிய திமுக கவுன்சிலர் மா. சுப்பிரமணியம், சைதாப்பேட்டையில் வைக்கப்பட்டுள்ளமுதல்வர் ஜெயலலிதாவின் பிரம்மாண்டமான பேனரை நீக்குவதற்கு உத்தரவிட வேண்டும் என்றார்.
இதற்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். துணை மேயரான கராத்தே தியாகராஜன், இக்கோரிக்கையை ஏற்க முடியாது என்றார்.
இதையடுத்து திமுக, அதிமுக கவுன்சிலர்களிடையே கடுமையான தகராறு ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிப்பேசிக் கொண்டனர்.
அப்போது முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி குறித்து வெற்றிவேல் ஏதோ பேச, இரு தரப்பினருக்கும்இடையே தகராறு வலுத்தது. ஒருவரையொருவர் சராமாரியாகத் திட்டிக் கொண்டனர்.
இந்நிலையில் சுப்பிரமணியன் மீதும், மற்றொரு திமுக கவுன்சிலரான கல்யாணசுந்தரம் என்பவர் மீதும் வெற்றிவேல்திடீரென்று பாய்ந்து அவர்களைத் தாக்க முயன்றார். ஆனால் அவர்கள் சுதாரித்து விலகிக் கொண்டனர்.
இதையடுத்து மாநராட்சிக் கூட்டத்தில் கடும் அமளி ஏற்பட்டது. ஒரே கூச்சலும் குழப்பமுமாகக் காணப்பட்டது.
இதைத் தொடர்ந்து இச்சம்பவத்தைக் கண்டித்து திமுக கவுன்சிலர்கள் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
ஆற்காடு வீராசாமியின் பெயரைத் தேவையில்லாமல் இழுத்து அவரைத் தரக்குறைவாகத் திட்டியதற்காகவும், திமுககவுன்சிலர்களைத் தாக்க முயற்சித்ததற்காகவும் வெற்றிவேல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று வலியுறுத்தி வெளிநடப்பு செய்த திமுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-->












Click it and Unblock the Notifications