குடிநீர் கோரி மத்தியக் குழுவினரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
சேலம்:
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளைப் பார்வையிடுவதற்காக வந்த மத்தியக் குழுவினரைப் பொதுமக்கள்முற்றுகையிட்டு குடிநீர் வேண்டும் என்று கோரினர்.
தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளைப் பார்வையிடுவதற்காக மத்திய வேளாண்மைத் துறைஇணைச் செயலாளரான ஆஷிஷ் பகுகுணா தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழுவினர் வந்துள்ளனர்.
நேற்று அவர்கள் தர்மபுரி மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டனர்.விவசாயிகளையும் சந்தித்து அவர்களுடைய குறைகளைக் கேட்டறிந்தனர்.
இந்நிலையில் இன்று அவர்கள் சேலம் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில்பார்வையிட்டனர். சேலம் மாவட்ட கலெக்டர் ராதாகிருஷ்ணன் வறட்சி பாதித்த பகுதிகள் குறித்து மத்தியக்குழுவினரிடம் விளக்கினார்.
பின்னர் சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கும் மத்தியக் குழுவினர் சென்றனர். வாடி, கருகிப்போயிருந்த நெற்பயிர்களையும், கரும்புப் பயிர்களையும் அவர்கள் பார்வையிட்டனர்.
கிராம மக்களின் குறைகளையும் அவர்கள் கேட்டறிந்தனர். பல கிராமங்களைச் சேர்ந்த மக்களும் தங்களின் குடிநீர்பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்று மத்தியக் குழுவினரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இன்னும் சில பகுதிகளில் மத்தியக் குழுவினரை கிராம மக்கள் முற்றுகையிட்டு தங்களுடைய குடிநீர்ப் பிரச்சனையைஉடனடியாகத் தீர்த்துவைக்க வேண்டும் என்று கூறி முறையிட்டனர்.
பின்னர் மக்களைச் சமாதானப்படுத்திய அதிகாரிகள், விவசாயத்திற்காக அரசு வழங்கிய கடன் உதவித்திட்டங்களைப் பற்றியும் விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்.
இன்று பிற்பகல் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் சில கிராமங்களைப் பார்வையிடும் மத்தியக் குழுவினர்,இன்று மாலை நாகப்பட்டினத்திற்குச் சென்று அங்கு வறட்சி பாதித்த பகுதிகளைப் பார்வையிடவுள்ளனர்.
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளைப் பார்வையிடும் பணியை நாளையுடன் மத்தியக் குழுவினர் முடிவுசெய்கின்றனர். நாளை மறுநாள் காலை சென்னையில் மீண்டும் தமிழக அரசு அதிகாரிகளுடன் அவர்கள்ஆலோசனையில் ஈடுபடுவார்கள்.
பின்னர் டெல்லி திரும்பும் அவர்கள் அன்றே பிரதமர் வாஜ்பாயிடம் தங்கள் அறிக்கையைச் சமர்ப்பிப்பார்கள்என்று கூறப்படுகிறது. அதன் பின்னர்தான் தமிழக அரசுக்கு நிதி ஒதுக்குவது குறித்து பிரதமர் முடிவெடுப்பார்.
சமீபத்தில் டெல்லி சென்றிருந்தபோது வாஜ்பாயைச் சந்தித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, வறட்சி நிவாரணமாகரூ.400 கோடியும், 2 லட்சம் டன் தானியங்களும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்என்பது நினைவுகூறத்தக்கது.
-->












Click it and Unblock the Notifications