திமுகவை ஆதரித்து 4 த.மா.கா.கா. எம்.எல்.ஏக்களின் பதவியை பறிக்க காங். கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ் மாநில காமராஜ் காங்கிரஸ் (த.மா.கா.கா.) கட்சியின் தலைவர் டாக்டர் குமாரதாஸ் உள்ளிட்ட அக்கட்சியைச்சேர்ந்த 4 எம்.எல்.ஏக்களின் பதவிகளையும் பறிக்க வேண்டும் என்று கோரி சபாநாயகர் காளிமுத்துவிடம்காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மனு கொடுத்துள்ளனர்.

தமிழக சட்டசபையில் நேற்று திமுக குறித்து டாக்டர் குமாரதாஸ் பேசியதைத் தொடர்ந்து அவரை அடிப்பதற்காகதிமுக எம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதி பாய்ந்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் சபையை விட்டு வெளியேற்றப்பட்டனர். மேலும் பரிதி இந்தத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். குமாரதாஸை மிரட்டியதற்காக அவர் மீது கிரிமினல் நடவடிக்கைஎடுக்கவும் காளிமுத்து தீர்மானம் நிறைவேற்றினார்.

இந்நிலையில் த.மா.கா.காவைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏக்களின் பதவிகளையும் பறிக்க வேண்டும் என்றுகாங்கிரஸ் சார்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சட்டசபை காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் நிருபர்களிடல் கூறுகையில்,

கடந்த 1991-96ல் காங்கிரஸ் கட்சியை உடைத்து ஐந்து எம்.எல்.ஏக்களைப் பயன்படுத்தி எங்கள் கட்சியைத்திட்டியது அதிமுக.

அதுபோலவே இப்போதும் காங்கிரஸைப் பிளவுபடுத்தி அதன் நான்கு எம்.எல்.ஏக்களைக் கொண்டு சபையில்தரக்குறைவான வார்த்தைகளை எல்லாம் பேசுவதற்கு அதிமுக அரசு அனுமதியளித்துள்ளது.

அருகதை என்ற வார்த்தையை திமுக எம்.எல்.ஏ. பொன்முடியைப் பார்த்து மட்டும் முதல்வர் ஜெயலலிதா பேசலாம்.குமாரதாஸை நோக்கி அந்த வார்த்தையை நான் பயன்படுத்தக் கூடாதா?

குமாரதாஸ் உள்ளிட்ட நான்கு எம்.எல்.ஏக்களின் பதவிகளையும் பறிக்க வேண்டும் என்று காளிமுத்துவிடம் மனுகொடுத்துள்ளோம்.

வெளிநடப்பு செய்வதாகச் சொல்வதற்குக் கூட 10 நிமிடம் மைக் இணைப்பு தர மறுக்கப்படுகிறது. பரிதி மீதுஎடுக்கப்பட்ட நடவடிக்கை அளவுக்கு அதிகமானது.

எதிர்காலத்தில் தமிழக சட்டசபையில் எதிர்க் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவதுகுறித்து விரைவில் முடிவுஎடுக்கப்படும் என்றார் எஸ்.ஆர்.பி.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+