"குமாரதாஸ் என்னை ஜாதிப் பெயர் சொல்லி திட்டினார்": போலீசில் பரிதி புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

த.மா.கா.கா. தலைவர் டாக்டர் குமாரதாஸ் தன்னை ஜாதிப் பெயர் சொல்லி திட்டியதாக திமுக எம்.எல்.ஏவான பரிதிஇளம்வழுதி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

நேற்று சட்டசபையில் அதிமுக ஆதரவு த.மா.கா.கா. எம்.எல்.ஏவான டாக்டர் குமாரதாஸ் திமுகவையும்கருணாநிதியையும் மிகக் கேவலமாகப் பேசினார். இதையடுத்து திமுக எம்.எல்.ஏவான பரிதி இளம்வழுதி அடிக்கப்பாய்ந்தார்.

இதையடுத்து பரிதியை இந்தக் கூட்டத் தொடர் மற்றும் வரும் பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட்செய்தார் சபாநாயகர் காளிமுத்து.

மேலும் தன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக பரிதி மீது டாக்டர் குமாரதாஸ் புகார் கொடுத்தார்.இதையடுத்து பரிதி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் டாக்டர் குமாரதாஸ் தன்னை ஜாதிப் பெயர் சொல்லி திட்டியதாக போலீசில் பரிதி இன்று புகார்கொடுத்துள்ளார்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்குத் தன் ஆதரவாளர்களுடன் சென்ற பரிதி, அங்கு கமிஷனர்விஜயகுமாரைச் சந்தித்து தன் மனுவைக் கொடுத்தார். ஆனால், அம்மனுவைப் பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டவிஜயகுமார் தன் அறையைவிட்டு வெளியேறிவிட்டார்.

இதையடுத்து கமிஷனர் அலுவலகத்தில் உள்ள ஊழியரிடம் அந்த மனுவை பரிதி கொடுத்துவிட்டு, அதற்கானஅத்தாட்சியையும் (acknowledgement) பெற்றுக் கொண்டார்.

தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் பரிதி இளம்வழுதி என்பது குறிப்பிடத்தக்கது. ஜாதிப் பெயரைச் சொல்லித் தன்னைடாக்டர் குமாரதாஸ் திட்டியது தீண்டாமை ஒழிப்புச் சட்டப்படி பெரும் குற்றமாகும் என்று பரிதி தெரிவித்தார். இதுதொடர்பாக தீண்டாமை ஒழிப்பு அமைப்பிடமும் புகார் அளிக்கப் போவதாகக் கூறினார்.

கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாக குமாரதாஸ் கூறிய புகாருக்குப் போட்டியாகவே பரிதி இந்த புகாரைக் கொடுத்துள்ளார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+