வீரப்பன் வேட்டை: சென்னையில் 5 மாநில டி.ஜி.பிக்கள் முக்கிய ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பது தொடர்பான முக்கிய ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்றுநடைபெற்றது. தமிழக, கர்நாடக, கேரள, ஆந்திர மற்றும் பாண்டிச்சேரி ஆகிய 5 மாநில டி.ஜி.பிக்கள் இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

வீரப்பன் கும்பல் அவனுடைய சொந்த ஊரான கோபிநத்தம் பகுதியிலும், கர்நாடகத்தின் பொன்னாச்சி பகுதியிலும்,நடமாடிக் கொண்டிருப்பதாக வந்த தகவல்களைத் தொடர்ந்து அப்பகுதிகளில் தமிழக, கர்நாடகஅதிரடிப்படையினர் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மாதேஸ்வரன் மலைப் பகுதியில் வீரப்பன் கும்பல் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலைத்தொடர்ந்து அப்பகுதியிலும் தமிழக, கர்நாடக அதிரடிப்படையினர் முகாமிட்டு வீரப்பனைத் தேடி வருகின்றனர்.

நேற்று நள்ளிரவு முதல் இப்பகுதியில் தீவிரமான தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இதை தமிழக டி.ஜி.பி.ராஜகோபாலனும் உறுதிப் படுத்தியுள்ளார். வீரப்பனை அதிரடிப்படையினர் வெகு வேகமாக முன்னேறிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

வீரப்பன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து விட்டதாகவும், அவனையும் அவனுடைய கும்பலையும்அதிரடிப்படையினர் சுற்றி வளைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் தென் மாநில டி.ஜி.பிக்கள் கூடி வீரப்பனைப் பிடிப்பது தொடர்பான முக்கியமானஆலோசனை நடத்தினர்.

தமிழக டி.ஜி.பி. ராஜகோபாலன், கர்நாடக டி.ஜி.பி. மடியாள், கேரள டி.ஜி.பி. ஜோசப் மற்றும் ஆந்திர, பாண்டிச்சேரிடி.ஜி.பிக்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் வீரப்பனைப் பிடிப்பது தொடர்பான புதிய யுக்திகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

சுவிட்சர்லாந்திலும் வீரப்பன்:

இந் நிலையில் இன்று பெங்களூரில் நிருபர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் கிருஷ்ணா, வீரப்பன் கர்நாடக காட்டுப் பகுதியில்தான் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இந்த வீரப்பன் என்னை எங்கே போனாலும் விட மாட்டான் போலிருக்கிறது.

சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்கச் சென்றிருந்தேன். அங்கு நான் சந்தித்த சில நாட்டுத்தலைவர்களும் கூட என்னிடம் யார் அது வீரப்பன்? அவனைப் பற்றி சொல்லுங்களேன் என்று கேட்டு என்னை அதிர்ச்சியில்ஆழ்த்தினர் என்றார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+