சாத்தான் வேதம் ஒதுகிறது: ஜெ. பேச்சு குறித்து கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் துணை சபாநாயகருமான பரிதி இளம் வழுதி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புவலுத்துள்ளது.

இந்தக் கைதை எதிர்த்து மாநில அளவில் போராட்டம் நடத்தப் போவதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். இந்தகைதுக்கு காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இன்று நிருபர்களிடம் பேசிய கருணாநிதி,

இந்த அரசின் தவறுகளையும் அநியாயங்களையும் வெளிப்படுத்திப் பேசிய காரணத்துக்காக பரிதி இளம் வழுதிபழிவாங்கப்பட்டிருக்கிறார். அவரை விடுவிக்க சட்டரீதியிலும் அரசியல்ரீதியிலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர்களை செயல்பட விடாமல் ஒடுக்குவதையே முதல்வர் ஜெயலலிதாவும் சபாநாயகர்காளிமுத்துவும் கடமையாகச் செய்து வருகின்றனர். பரிதி கைது செய்யப்பட்டதை எதிர்த்து காளிமுத்துவுக்கு எதிராக நம்பிக்கைஇல்லாத் தீர்மானம் கொண்டு வருவோம்.

இது குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் ஆலோசனை நடத்துவோம். இது தவிர மாநிலம் முழுவதும் கண்டனஆர்ப்பாட்டங்களும், கண்டனப் பொதுக் கூட்டங்களும் நடத்தப்படும்.

முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் எதிர்க் கட்சியினரை வாய்க்கு வந்தபடி பேசியுள்ளார். நான் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமாசெய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதைச் சொல்ல ஜெயலலிதாவுக்கு எந்த உரிமையும் இல்லை. இந்தப் பதவி மக்கள்எனக்குக் கொடுத்தது.

மேலும் நான் திமுக தலைவராகவே இருக்க லாயக்கில்லை என்று அந்த அம்மையார் கூறியிருக்கிறார். இது குறித்து முடிவு செய்யவேண்டியது திமுக தொண்டன் தானே தவிர, எதற்கும் லாயக்கில்லாத ஜெயலலிதா கிடையாது.

ஜெயலலிதாவின் பேச்சைக் கேட்டால் சாத்தான் வேதம் ஓதுவது தான் நினைவுக்கு வருகிறது.

முன்பு காமராஜர், எம்.ஜி.ஆர். ஆகியோர் ஆட்சியில் இருந்தபோதெல்லாம் நான் சட்டமன்றத்துக்குச் சென்று செயல்பட முடிந்தது.ஆனால், ஜெயலலிதாவும் அவரது அதிமுக எம்.எல்.ஏக்களும் எந்த அராஜகத்தையும் செய்யத் துணிந்திருக்கிற நிலையில் நான்சட்டசபைக்குப் போனாலும் செயல்பட முடியாது என்பது தான் உண்மை என்றார் கருணாநிதி.

நள்ளிரவு கைதுகளும் அதிமுகவும்: இளங்கோவன்

இந் நிலையில் பரிதி கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் செயல் தஸைவர் இளங்கோவனும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சட்டசபையில் அசுர பலம் இருக்கிற ஒரே காரணத்துக்காக ஜெயலலிதா ரொம்பப் பேசுகிறார். எதிர்க் கட்சிகளை கூப்பிட்டுஅறிவுரை சொல்லிக் கொண்டிக்கிறார். ஆனால், மக்கள் பிரச்சனைகள் குறித்து இவர் இப்படி எல்லாம் பேசுவது இல்லை.

எதிர்க் கட்சியினருக்கு அறிவுரை சொல்ல பல மணி நேரம் ஓயாமல் தொடர்ந்து பேசிய ஜெயலலிதா மக்கள் விவகாரங்களைப்பேச சில நொடிகளையாவது செலவிட்டிருப்பாரா? நிச்சயம் இல்லை.

நடுராத்திரிக் கைதுகளை மட்டுமே இந்த ஆட்சியாளர்கள் பெரிதும் நம்பிக் கொண்டிருப்பது அவர்களுக்கு நல்லதல்ல என்பதைமட்டும் சொல்லிக் கொள்கிறேன் என்று இளங்கோவன் கூறியுள்ளார்.

பரிதியை விடுவிக்க புதிய தமிழகம் கோரிக்கை:

இந் நிலையில் பரிதி இளம் வழுதியை உடனே விடுதலை செய்ய வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்கிருஷ்ணசாமி கூறியுள்ளார். இல்லாவிட்டால் புதிய தமிழகம் போராட்டத்தில் ஈடுபடும் என்றும் கூறியுள்ளார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+