சென்னை அருகே பறந்த அமெரிக்க போர் விமானம்: உளவு பார்த்ததா?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான ஒரு விமானம் அனுமதி இல்லாமல் சென்னை அருகே அதி பயங்கர வேகத்தில்பறந்து சென்றது. இது உளவு பார்க்கும் பணியில் ஈடுபட்டதாகக் கருதப்படுகிறது.

இந்த விமானத்தைத் தொடர்பு கொள்ள தரைக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் முயன்றபோது பதில் ஏதும் பேசாமல் விமானத்தைஅதன் விமானிகள் ஓட்டிச் சென்றுவிட்டனர்.

நேற்று இந்தச் சம்பவம் நடந்தது. பகல் 12 மணியளவில் இந்த விமானம் சென்னைக்குக் கிழக்கே 150 நாட்டிகல் மைல்தொலைவில் பறந்தது. சுமார் 35,000 அடி உயரத்தில் பறந்த இந்த விமானத்தை சென்னை விமான நிலையத்தின் ரேடார்கள் பதிவுசெய்தன.

பறக்கும் விமானம் எந்த வகையைச் சேர்ந்தது என்பதையும், அது எந்த நாட்டுடன் தொடர்ந்து வயர்லெஸ் தொடர்பு வைத்துள்ளதுஎன்பதையும் கண்டறியும் ரேடார்கள் சென்னை விமான நிலையத்தில் உள்ளன.

இதை வைத்து அந்த விமானம் அமெரிக்காவுக்குச் சொந்தமானது என்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். உடனே அதன்விமானிகளை ரேடியோ மூலம் விமானக் கட்டுப்பாட்டு அறை தொடர்பு கொண்டது.

ஆனால், விமானக் கட்டுப்பாட்டு அறையின் எந்தக் கேள்விக்கும் அந்த விமானிகள் பதில் தரவில்லை. சுமார் 2 மணி நேரம்சென்னைக்கு அருகிலேயே பறந்த அந்த விமானம் 2 மணியளவில் அங்கிருந்து சர்வதேசக் கடல் எல்லைக்குள் புகுந்து ரேடாரில்இருந்து பறந்தது.

சென்னை அருகே இருந்த 2 மணி நேரமும் அந்த விமானம் அதி பயங்கர வேகத்தில் பறந்தது.

இந்திய விமானப் படையின் ரேடார்களிலும் இந்த விமானம் பதிவாகி உள்ளது. ஆனால், இந்த விமானத்தை மடக்கிப் பிடிக்க எந்தமுயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.

கல்பாக்கம் அணு மின் நிலையம் குறித்து உளவு பார்க்க இந்த விமானம் வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இது தொடர்பாக விசாரணை நடத்த டெல்லியில் இருந்து உளவுப் பிரிவு அதிகாரிகளும் விமானப் படை அதிகாரிகளும்சென்னை விரைந்துள்ளனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+