மெரீனாவில் தலைமைச் செயலகம்: மீனவர்கள் கடும் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மெரீனா கடற்கரைச் சாலையில் புதிதாக தலைமைச் செயலகம் அமைக்கும் தமிழக அரசின் முடிவுக்கு மீனவர்களிடையே கடும்எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

அதிமுகவின் ஓட்டு வங்கியான இந்த மீனவர்கள் அரசின் திட்டத்தை எதிர்த்து பெரும் போராட்டத்தில் இறங்கப் போவதாகஎச்சரித்துள்ளனர்.

மகாபலிபுரத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் பணியை தமிழக முதல்வர் ஜெயலலிதா கைவிட்டுவிட்டார். கஜானா வறண்டுகிடக்கும் நிலையில் இத் திட்டத்தை நிறைவேற்ற அரசிடம் பணம் இல்லை.

இதனால் மெரீனா கடற்கரை சாலையிலேயே விவேகானந்தர் இல்லத்துக்கும் ராணி மேரிக் கல்லூரிக்கும் இடையே புதியதலைமைச் செயலகத்தை அமைக்கப் போவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். 2 ஆண்டுகளுக்குள் இந்தப் பணிகள்முடிக்கப்படும் எனவும் அறிவித்தார்.

இதற்கு கடற்கரையில் உள்ள மீனவர் குப்பங்களில் வசிக்கும் மீனவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இங்கு தலைமைச்செயலகம் அமைந்தால் தங்களை அரசு இடம் பெயரச் செய்யலாம் என்ற அச்சம் மீனவர்களிடையே பரவியுள்ளது.

அயோத்தியா குப்பம், நொச்சிக் குப்பம், டுமீல் குப்பம், நடுக்குப்பம் உள்ளிட்ட இந்த மீனவர் குடியிருப்புகளில் சுமார் 1.5 லட்சம்பேர் வசிக்கின்றனர். இவர்கள் பரம்பரை பரம்பரையாகவே அதிமுகவுக்கு வாக்களித்து வருபவர்கள்.

இந் நிலையில் இப்போது அரசின் அறிவிப்பு இவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைமைச் செயலகத்தின் அருகேகுப்பங்கள் இருப்பதை அரசு விரும்பாது, இதனால் குப்பங்கள் காலி செய்யப்படும் என்று அஞ்சும் இவர்கள் தலைமைச் செயலகம்அமைவதை எதிர்த்து மாநில அளவில் பெரும் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டு வருகின்றனர்.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்தே இங்கு வசித்து வருவதாகவும், எங்கள் குப்பங்களை அரசு ஆக்கிரமித்தால் பெரும்போராட்டம் நடத்துவோம் எனவும் இவர்கள் எச்சரித்துள்ளனர்.

முன்பு மெரீனவைை அழகுபடுத்துவதாகக் கூறி கட்டுமரங்களை அரசு அகற்றியபோது பெரும் வன்முறை வெடித்தது. இப்போதுமீனவர்களின் குடியிருப்புகள் அகற்றப்பட்டால் பெரும் கலவரமே ஏற்படும் என்று தெரிகிறது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+