சாத்தான்குளம் தேர்தல்: ஓரிரு நாட்களில் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு?
சென்னை:
சாத்தான்குளம் இடைத் தேர்தலில் போட்டியிடும் தங்கள் கட்சியின் வேட்பாளர் பெயரை அடுத்த ஓரிரு நாட்களில்அறிவிக்கப் போவதாக தமிழக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
சாத்தான்குளத்தில் வேட்புமனுத் தாக்கல் தொடங்கிவிட்ட நிலையில் நேற்று அதிமுக தன்னுடைய வேட்பாளர்பெயரை அறிவித்தது. சாத்தான்குளம் ஒன்றிய அதிமுக செயலாளரான நீலமேகவர்ணம் அங்கு நிறுத்தப்பட்டுள்ளார்.
திமுக, மதிமுக, பா.ஜக. ஆகிய கட்சிகள் இத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கூறிய நிலையில்அதிமுகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது.
ஆனால் காங்கிரஸ் தன்னுடைய வேட்பாளரின் பெயரை இன்னும் அறிவிக்கவில்லை. அடுத்த ஓரிரு நாட்களில்வேட்பாளரின் பெயரை அறிவிக்கப் போவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் சோ. பாலகிருஷ்ணன் மற்றும் செயல்தலைவர் இளங்கோவன் ஆகியோர் இன்று அறிவித்தனர்.
இது தொடர்பாக அவர்கள் இருவரும் பேசுகையில்,
சாத்தான்குளம் இடைத் தேர்தலில் எங்கள் கட்சிக்கு மக்கள் தமிழ் தேசம் ஆதரவளிக்கப் போவதாகஅறிவித்துள்ளது.
காங்கிரசுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கோரி இன்று காலை விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர்திருமாவளவனையும் சந்தித்துக் கேட்டுக் கொண்டோம். மற்ற கட்சித் தலைவர்களையும் விரைவில் சந்தித்து இதுதொடர்பான கோரிக்கைகளை விடுக்கவுள்ளோம்.
திமுக ஒரு மதச் சார்பற்ற கட்சி என்பதால் அந்தக் கட்சியிடமும் நாங்கள் கோரிக்கை விடுப்போம். சாத்தான்குளம்தேர்தலில் அக்கட்சி எங்களுக்கு ஆதரவளிக்கும் என்று நம்புகிறோம். ஆனாலும் இது தொடர்பாக அக்கட்சியின்தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்.
இத்தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பெயரை அடுத்த ஓரிரு நாட்களில் வெளியிடுவோம் என்றுசோ.பாவும் இளங்கோவனும் கூறினர்.
இதற்கிடையே காங்கிரஸ் கட்சிக்கு இத்தேர்தலில் ஆதரவளிப்பது குறித்து வரும் 5ம் தேதி தங்கள் கட்சி முடிவைஅறிவிக்கும் என்று திருமாவளவன் இன்று நிருபர்களிடம் கூறினார்.
-->
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications