சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கிடந்த பெண் சிசு
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் அநாதையாகக் கிடந்த பெண் சிசுவை அம்மருத்துவமனையின்ஊழியர்கள் உயிருடன் மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒரு மரத்தின் அடியில் குழந்தை அழும் சத்தத்தைக் கேட்ட சில ஊழியர்கள்அங்கு சென்று பார்த்தனர்.
பிறந்து சில நாட்களே ஆன நிலையில் ஒரு அழகான பெண் குழந்தை ஒரு துணியில் சுற்றப்பட்ட நிலையில் அங்குகிடந்தது.
அந்தக் குழந்தையை உடனடியாக மீட்ட மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவமனையில் சேர்த்தனர்.
சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அந்தக் குழந்தை ஒரு குழந்தைகள் நலக் காப்பகத்தில் பத்திரமாகஒப்படைக்கப்பட்டது.
கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் சேலம் மருத்துவமனை வளாகத்தில் வேறொரு பெண் சிசு கண்டெடுக்கப்பட்டதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
-->












Click it and Unblock the Notifications