கலாம், வாஜ்பாய் இரங்கல்
டெல்லி:
கொலம்பியா ராக்கெட் வெடித்துச் சிதறியதில் உயிரிழந்த இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின்குடும்பத்தினருக்கு ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமும், பிரதமர் வாஜ்பாயும் ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துள்ளனர்.
மேலும் இச்சம்பவத்தில் மற்ற ஆறு விண்வெளி வீரர்கள் உடல் சிதறி இறந்து போனது குறித்து மிகவும் மனவேதனை அடைந்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சுக்கு அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில் வாஜ்பாய்கூறியுள்ளார்.
இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை என்ற புகழை நம் நாட்டுக்குத் தேடித் தந்தார் கல்பனா. இந்தஅதிர்ச்சியான சம்பவத்தில் அவர் இறந்து போனது அறிந்து ஆழ்ந்த கவலை அடைந்ததாக துணைப் பிரதமர்அத்வானி கூறினார்.
கல்பனாவின் சாவு இந்தியாவுக்கே ஏற்பட்டுள்ள மிகப் பெரிய இழப்பாகும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர்ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறினார்.
இந்தத் துயரமான சம்பவம் கடும் அதிர்ச்சியை அளித்துள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர்கஸ்தூரி ரங்கன் தெரிவித்தார்.
மத்திய அணுசக்திக் கமிஷனின் முன்னாள் தலைவரான விஞ்ஞானி ஆர். சிதம்பரமும் தன்னுடைய இரங்கலைத்தெரிவித்துள்ளார்.
-->












Click it and Unblock the Notifications